இந்திய அணியை சமீப காலமாக டி20 தொடர்களில் வழிநடத்தி வரும் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா செர்பியா நாட்டை சேர்ந்த நடாஷா ஸ்டான்கோவிக் காதலித்து 2020 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார், அதன்பின் இருவருக்கும் ஒரு ஆண் குழந்தை பிறந்தது.
இந்நிலையில் ஹர்திக் பாண்டியா மீண்டும் 2வது திருமணம் செய்து கொள்ள போவதாக வெளியாகிய தகவல் அனைவருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியது,
ஹர்திக் பாண்டியா மற்றும் நடாஷா ஜோடியின் திருமணம் கொரோனா காலகட்டத்தில் மிகவும் சாதாரண நிலையில் நடைபெற்றது,
எனவே தனது மனைவியை மிகவும் பிரமாண்டமாக அனைவரது முன்னிலையிலும் திருமணம் செய்து கொள்ள போவதாக பாண்டியா தெரிவித்துள்ளார்.
இந்த திருமண நிகழ்வை பிரமாண்ட முறையில் நடத்த திட்டமிட்ட ஹர்திக் பாண்டியா ராஜஸ்தானில் உதய்பூரில் உள்ள அரண்மனையில் காதலர் தினமான இன்று (பிப்ரவரி 14 ) தனது காதல் மனைவியான நடாஷா ஸ்டான்கோவிக் உடன் மீண்டும் திருமணம் செய்து கொள்ள உள்ளார்.
இந்திய அணியின் வீரர்கள் கே.எல். ராகுல் மற்றும் அக்சர் படேல் அண்மையில் மிகவும் விமர்சையாக திருமணம் செய்து கொண்ட நிலையில், ஹர்திக் பாண்டியாவும் இரண்டாவது முறையாக திருமணம் செய்து கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாண்டியாவின் திருமண நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகர், நடிகைகள், கிரிக்கெட் உலகின் நட்சத்திரங்கள் அனைவருக்கும் சிறப்பான விருந்து பறிமாறப்பட உள்ளது.
மு.வா.ஜெகதீஸ் குமார்