ஐபிஎல் தோல்விக்கு பிறகு வெற்றி முகம்… தனது கஷ்டகாலத்தை பகிர்ந்த ஹர்திக் பாண்டியா

Published On:

| By Selvam

Hardik Pandya: குஜராத் டைட்டன்ஸ் அணியை முதல் சீசனிலேயே ஐபிஎல் கோப்பை வெல்ல வைத்து, 2வது சீசனில் இறுதிப் போட்டி வரை அழைத்து சென்ற இந்திய அணியின் துணை கேப்டன் ஹர்திக் பாண்டியாவை, 2024 ஐபிஎல் தொடருக்கு முன்னதாக ட்ரான்ஸ்பர் முறையில் வாங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி, அந்த அணியின் கேப்டனாகவும் அவரை நியமித்தது.

ரோகித் சர்மா இருக்கும்போதே ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டது, ரோகித் ரசிகர்களிடமும், மும்பை ரசிகர்களிடமும் மிகுந்த எதிர்ப்பை பெற்றது.

இதை தொடர்ந்து, அந்த தொடர் அவருக்கு ஒரு மிக மோசமான தொடராகவே அமைந்தது. மும்பை அணிக்கு கேப்டனாக விளையாடிய 14 போட்டிகளில், 4 போட்டிகளில் மட்டுமே அவரால் வெற்றியை தேடித்தர முடிந்தது.

இந்த தொடரில், பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் தனித்து நிற்காத ஹர்திக் பாண்டியா, பேட்டிங்கில் 216 ரன்களையும், பந்துவீச்சில் 11 விக்கெட்களையும் மட்டும் கைப்பறியிருந்தார்.

இதை தொடர்ந்து, தற்போது அவரும் அவரது மனைவி நடாஷா ஸ்டான்கோவிக்கும் பிரியவுள்ளதாகவும் சில வதந்திகள் பரவி வருகின்றன.

ஆனால் நடந்து வரும் 2024 டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்றுள்ள இந்திய அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ஹர்திக் பாண்டியா சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

இந்த தொடருக்கு முன்னதாக வங்கதேசத்திற்கு எதிரான வார்ம்-அப் ஆட்டத்தில், பேட்டிங்கில் 4 சிக்ஸ், 2 ஃபோருடன் 23 பந்துகளில் 40 ரன்கள் குவித்து, 1 விக்கெட்டையும் கைப்பற்றி இருந்தார்.

Hardik Pandya T20 World Cup 2024: IPL की बुरी यादें हुईं पीछे, हार्द‍िक  पंड्या ने टी-20 वर्ल्ड कप में मचाया तहलका, तोड़ दी आयरलैंड की कमर - Hardik  Pandya india vs Ireland

அத்துடன் நேற்று நடைபெற்ற அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஒரு ஓவர் மெய்டனுடன் 3 விக்கெட்டுகளை எடுத்து வெற்றிக்கு முக்கிய பங்காற்றியுள்ளார்.

இந்நிலையில், தனது இந்த கடினமான நேரம் குறித்து மனம் திறந்து பேசியுள்ள ஹர்திக் பாண்டியா, “வாழ்க்கை சில நேரங்களில் உங்களை இக்கட்டான சூழலுக்கு அழைத்து சென்று நிறுத்தும்.

ஆனால், அந்த ஆட்டத்தில் இருந்தோ, அந்த களத்தில் இருந்தோ, அந்த போரில் இருந்தோ நீங்கள் வெளியேறினால், நீங்கள் எதிர்பார்க்கும் முடிவு ஒருபோதும் உங்களுக்கு கிடைக்காது. அந்த போரை ஒருவர் தொடர்ந்து போராட வேண்டும் என்றே நான் கருதுகிறேன்”, என தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் பேசியுள்ள அவர், “ஆம், அது கடினமான நேரம் தான். ஆனால், அதே நேரத்தில் நான் முன்பு கடைப்பிடித்த அதே நடைமுறைகளைப் தொடர்ந்து பின்பற்றி வருகிறேன். சில நேரங்களில், இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்படும்.

வாழ்க்கையில் நல்ல நேரங்களும் இருக்கும், கெட்ட நேரங்களும் இருக்கும். இவை அனைத்துமே நிலையற்றது. நான் இது போன்ற சூழ்நிலையில் பல முறை இருந்துள்ளேன்.

ஒவ்வொரு முறையும் மீண்டு வந்துள்ளேன். இம்முறையும் அதே போல மீண்டும் வருவேன்”, எனவும் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.

“நான் இதிலிருந்து ஓடி ஒளிய மாட்டேன். தலைநிமிர்ந்து அனைத்தையும் எதிர்கொள்வேன்”, எனவும் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

– மகிழ்

வாக்கு எண்ணும் மையத்திற்கு காலையிலேயே சென்ற திருமாவளவன், கார்த்தி சிதம்பரம்

பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையத்திற்கு வந்த தபால் வாக்கு பெட்டிகள்!

SA vs SL : தட்டுத்தடுமாறி இலங்கையை வீழ்த்திய தென் ஆப்பிரிக்கா!

நாடாளுமன்ற தேர்தல்… ஜெயிக்கப்போவது யார்? சற்று நேரத்தில் வாக்கு எண்ணிக்கை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share