Hardik Pandya is injured

காயம் காரணமாக வெளியேறிய ஹர்திக் பாண்டியா -பந்துவீசிய விராட் கோலி

விளையாட்டு

2023 உலகக்கோப்பை தொடரில், முதல் 3 போட்டிகளில் அதிரடியாக விளையாடி தொடர் வெற்றிகளை குவித்த இந்தியா, தனது 4வது போட்டியில் வங்கதேச அணியை எதிர்கொண்டது.

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. வங்கதேச அணியின் கேப்டன் ஷாகிப் அல் ஹசான் காயம் காரணமாக இந்த போட்டியில் விளையாடவில்லை.

அவருக்கு மாற்றாக நஜிமுல் ஹொசைன் சன்டோ வங்கதேச அணியை வழிநடத்தினார். இந்திய அணி எந்த ஒரு மாற்றமும் இன்றி களமிறங்கியது.

பின் களமிறங்கிய வங்கதேச அணி துவக்க ஆட்டக்காரர்கள் தன்சித் ஹசன் மற்றும் லிட்டன் தாஸ், நிதானமாக ஆட்டத்தை துவங்கி, 6வது ஓவரில் இருந்து அதிரடிக்கு மாறினர்.

இந்திய அணிக்காக முதல் ஸ்பெல்லை ஜஸ்பிரீத் பும்ரா மற்றும் முகமது சிராஜ் துவங்கிய நிலையில், 9வது ஓவரில் ஸ்பெல்லில் மாற்றத்தை ஏற்படுத்திய ரோகித் சர்மா, ஹர்திக் பாண்டியாவை பந்துவீச எடுத்துவந்தார்.

இவரின் முதல் 3 பந்துகளில், லிட்டன் தாஸ் 2 பவுண்டரிகளை விளாச, 4வது பந்தை வீச வந்தபோது அவருக்கு கால் இடறி இடது கணுக்காலில் காயம் ஏற்பட்டது.

உடனடியாக மைதானத்திற்குள் வந்த மருத்துவர்கள் அவருக்கு முதலுதவி செய்தனர்.

பின் மீண்டும் அவர் பந்துவீச முயன்றபோது அவரால் ஓடிவர முடியவில்லை. இதை தொடர்ந்து, உடனடியாக ஹர்திக் பாண்டியா போட்டியில் இருந்து ஒய்வு பெற்று மைதானத்தில் இருந்து வெளியேறினார்.

வாட்ஸ் அப்பில் மின்னம்பலம் செய்திகளை படிக்க… இங்கே க்ளிக் செய்யவும்!

அவரின் நிலை குறித்து X தளத்தில் ட்வீட் செய்துள்ள இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ,

“ஹர்திக் பாண்டியாவுக்கு ஏற்பட்ட காயத்திற்கு, அந்த நொடியிலேயே முதலுதவி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு காலில் ஸ்கேன் எடுக்கப்பட உள்ளது”, என அறிவித்துள்ளது. இந்த தகவல் இந்திய கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதன்பின் ஒரு சுவாரஸ்ய நிகழ்வு ஏற்பட்டது. ஹர்திக் பாண்டியாவின் மீதமிருந்த ஓவரை பூர்த்தி செய்வதற்கான வாய்ப்பை, ரோகித் சர்மா விராட் கோலிக்கு வழங்கினார். மீதமிருந்த 3 பந்துகளை வீசிய கோலி, 2 ரன்களை மட்டுமே வழங்கினார்.

வங்கதேச அணிக்காக துவக்க ஆட்டக்காரர்கள் தன்சித் ஹசன் 51 ரன்களும், லிட்டன் தாஸ் 66 ரன்களும் சேர்த்தனர்.

அவர்களை தொடர்ந்து, அனைவரும் சொற்ப ரன்களுக்கு வெளியேற, 6வது வீரராக களமிறங்க முஷ்ஃபிகுர் ரஹீம் 38 ரன்களும், 7வது வீரராக களமிறங்கிய மஹ்முதுல்லா 46 ரன்களும் சேர்த்தனர்.

மற்ற அனைவரும் சொற்ப ரன்களுக்கு வெளியேற, 50 ஓவர்கள் முடிவில் வங்கதேச அணி 8 விக்கெட் இழப்பிற்கு 256 ரன்கள் சேர்ந்திருந்தது. இந்தியாவுக்காக பும்ரா, சிராஜ் மற்றும் ஜடேஜா தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர்.

டிஜிட்டல் திண்ணை: உதயநிதிக்கு சவாலா விஜய்? திமுக நடத்திய திடீர் சர்வே!

மேல் மருவத்தூர் பங்காரு அடிகளார் காலமானார்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *