புனேவில் நேற்று(அக்டோபர் 19) நடைபெற்ற வங்கதேசத்துக்கு எதிரான உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
எனினும் இந்த ஆட்டத்தில் லிட்டன் தாஸின் ஸ்ட்ரெயிட் டிரைவில் அடிக்கப்பட்ட பந்தை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்ட இந்திய அணியின் துணை கேப்டனும், ஆல்ரவுண்டருமான ஹர்திக் பாண்டியா காயமடைந்துள்ளது அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
அவர் காயமடைந்ததும், உடனடியாக போட்டியில் இருந்து வெளியேறினார். அவருக்கு எக்ஸ்ரே எடுக்கப்பட்ட பின்னர் முடிவுகள் அறிவிக்கப்படும் என்று பிசிசிஐ தரப்பில் கூறப்பட்டது.
இந்த நிலையில் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேஷன் ஸ்டேடியத்தில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான இந்தியாவின் போட்டியின் போது இந்திய அணியின் துணை கேப்டன் ஹர்திக் பாண்டியா தனது சொந்த பந்துவீச்சில் பீல்டிங் செய்யும் போது அவரது இடது கணுக்காலில் காயம் ஏற்பட்டது.
ஆல்ரவுண்டர் ஸ்கேன் எடுக்கப்பட்டு ஓய்வெடுக்க அறிவுறுத்தப்பட்டார். அவர் தொடர்ந்து பிசிசிஐ மருத்துவக் குழுவின் கண்காணிப்பில் இருப்பார்.
வரும் 22ஆம் தேதி தரமசாலாவில் நியூசிலாந்து அணியை சந்திக்கிறது இந்திய அணி. அதற்காக இன்று (அக்டோபர் 20) அங்கு விமானத்தில் செல்லும் இந்திய அணியுடன் ஹர்திக் பாண்டியா செல்லமாட்டார். மாறாக வரும் 29ஆம் தேதி லக்னோவில் விளையாடும் இந்தியா – இங்கிலாந்து ஆட்டத்தில் ஹர்திக் நேரடியாக அணியுடன் இணைவார்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
பாலின சமத்துவத்தை நிலைநாட்டியவர் பங்காரு அடிகளார்: திருமாவளவன் இரங்கல்!
சிவப்பு சேலையில் பங்காரு அடிகளாருக்கு சசிகலா அஞ்சலி!