முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மாவை ஓட விட்ட ஹர்திக் பாண்டியாவை, ரசிகர்கள் பயங்கரமாக கிண்டலடித்து வருகின்றனர்.
நேற்று (மார்ச் 24) நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் இடையிலான போட்டியில், மும்பையை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் அணி ‘திரில்’ வெற்றி பெற்றது.
இதன் மூலம் குஜராத் அணியின் இளம் கேப்டன் சுப்மன் கில் தன்னுடைய முதல் போட்டியையே, வெற்றியுடன் தொடங்கியுள்ளார்.
அதேநேரம் புதிய கேப்டன் ஹர்திக் பாண்டியா தலைமையில் மும்பை அணி வெற்றிகரமாக தன்னுடைய முதல் தோல்வியை பதிவு செய்துள்ளது.
டாஸ் போட வந்த ஹர்திக் பாண்டியாவிற்கு எதிராக ரசிகர்கள் கத்தினர். அப்போது தொடங்கி மேட்ச் முடியும்வரையில் மும்பைக்கு எதிராகவே எல்லாம் நடந்தது.
குறிப்பாக பும்ரா போன்ற உலகின் தலைசிறந்த பவுலர்களை வைத்துக்கொண்டு, ஹர்திக் பாண்டியா பவர்பிளேயில் இரண்டு ஓவர்களை வீசி ரன்களை வாரிவழங்கினார்.
IPL 2024: இரண்டாக ‘பிரிந்த’ அணிகள்… எந்த ‘குரூப்ல’ யாரு இருக்காங்கன்னு பாருங்க!
அதுவே கடைசி நேரத்தில் மும்பை அணி தோற்பதற்கும் காரணமாக அமைந்தது. இவை எல்லாவற்றையும் விட ரோஹித் சர்மாவை லாங் ஆனில் பீல்டிங் செய்யவிட்டு, மும்பை ரசிகர்களின் வெறுப்பில் மேலும் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி இருக்கிறார் ஹர்திக்.
குஜராத் அணிக்கு எதிராக கடைசி ஓவரை மும்பை அணியின் ஜெரால்ட் காட்ஸி வீசினார். அப்போது களத்தில் நின்ற ரோஹித் சர்மாவை லாங் ஆன் செல்லுமாறு ஹர்திக் கூறினார்.
MI vs GT: கேப்டன்ஷிப்னா இப்படி இருக்கணும்… கில்லின் தலைமையில் ‘மும்பையை’ வீழ்த்தியது குஜராத்
ரோஹித் லாங் ஆனில் ஓடிச்சென்று நிற்க வேறு, வேறு இடங்களுக்கு செல்லும்படி ஹர்திக் அவரிடம் கூறிக்கொண்டே இருந்தார். இதனால் ரோஹித் சர்மா பவுண்டரி லைனில் ஓடிக்கொண்டே இருந்தார்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதைப்பார்த்த ரசிகர்கள் ‘அவரு தான் பாஸ் இந்தியா டீமோட கேப்டன். அதை மறந்துடாதீங்க’, ‘ 5 கோப்பை வின் பண்ணி கொடுத்தும் இப்படி நடத்துறாங்க’, ‘நீங்க பேசாம டீம் மாறிடுங்க ரோஹித்’ என கொந்தளித்து வருகின்றனர்.
https://twitter.com/KillerViNoo7/status/1772086379121348750
முதல் போட்டியில் தோல்வியை சந்தித்தாலும் மீண்டுவருவது மும்பையின் வழக்கம். இந்தமுறை ஹர்திக் தலைமையில் மும்பை அணி மீண்டு வருமா?
தன்னுடைய கேப்டன்ஷிப் குறித்த விமர்சனங்களுக்கு ஹர்திக் பாண்டியா முற்றுப்புள்ளி வைப்பாரா? என்பதை நாம் காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
-மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தமிழகத்தில் திமுக அதிமுக இடையே தான் போட்டி: எடப்பாடி
மதிமுக துரைவைகோ வேட்புமனு தாக்கலில் திடீர் குழப்பம்!
சிவகங்கை தொகுதியில நெட்பிளிக்ஸ் சப்ஸ்கிரிப்ஷன் இலவசமா? – அப்டேட் குமாரு
GT Vs MI: எங்களுக்கெல்லாம் ‘ஜாலியா’ தான் இருக்கு… ‘மீம்ஸ்’ போட்டு கிண்டலடிக்கும் ரசிகர்கள்!