ஹர்திக் பாண்டியா கேப்டன்சியும் , தொடரும் கமெண்ட்ஸ்களும்!

விளையாட்டு

ஹர்திக் பாண்ட்யாவின் கேப்டன்சி ஓகே வா ? இல்லையா என்பது போன்ற விவாதங்கள் ஸ்போர்ட்ஸ் கார்னர் ஏரியாவில் ஹைலெவலாக கேட்க ஆரம்பித்திருக்கிறது.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணியானது மூன்று டி20 மற்றும் மூன்று ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.

ஜனவரி 3 , ஜனவரி 5 மற்றும் ஜனவரி 7 ஆகிய தேதிகளில் டி20 ஆட்டங்கள். ஜனவரி 10 ,12 மற்றும் 15 ஆகிய தேதிகளில் ஒருநாள் தொடர்.

முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி , இரண்டாவது போட்டியில் இலங்கை அணி வெற்றி மற்றும் மூன்றாவது ஆட்டத்தில் யார் வெல்கிறார்களோ அவர்களே தொடரை கைப்பற்றுவார்கள். இப்படி இருக்கையில் தான் இளம் வீரர்களை கொண்டு களமாடி வரும் இந்திய அணி இந்த முறை சாதிக்குமா? இதன் தலைமையேற்றிருக்கும் ஹர்திக் பாண்டியா சரி வருவாரா? சரி இல்லையா? என்ற விவாதங்கள் வீரர்கள் மத்தியிலும் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியிலும் ஆரம்பித்திருக்கிறது.

காரணம் இந்திய அணியின் நோக்கமே இப்போதிருந்தே இந்திய அணியில் இளம் வீரர்களை உருவாக்கி விட்டால் குறிப்பாக டி 20, டெஸ்ட் மற்றும் ஒருநாள் என இரு பிரிவாக பிரித்து அணியை உருவாக்கினால் உலக கோப்பையில் மோதும் போது இலகுவாக இருக்கும், அது மட்டுமில்லாமல் சரியான அணியை உருவாக்கிட முடியும் என்பதன் அடிப்படையிலான சோதனை முயற்சியில் தான் இந்த முறை அணி உருவாக்கம் இருந்தது.

ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் முதல் போட்டியில் ஆடும் போது இந்திய அணி 162 ரன்களுக்கு 5 விக்கெட் என வெறும் இரண்டே ரன்களில் வெற்றியைப் பதிவு செய்தது. இலங்கை அணியினர் போராடினாலும் இந்திய அணி அன்றைய ஆட்டத்தில் திரில் வெற்றி தான்.

அதன் பின்னர் இரண்டாவது ஆட்டத்தில் இந்திய அணியின் கேப்டன் எடுத்த முடிவை தான் எல்லோரும் பெரும் விமர்சனத்துக்கு உள்ளாக்கினர். அதிலும் மகாராஷ்ட்ரா மாநிலத்தில் மைதானம் பேட்டிங் செய்வதற்கு மிகவும் அற்புதமாக இருக்கும் என்பது எல்லோரும் அறிந்ததே. இதனால் டாஸ் முக்கிய விசயமாக பார்க்கப்படும். அப்படி டாஸில் வெற்றி பெற்று விட்டால் டபுள் ஹேப்பினஸ், காரணம் அவர்கள் பேட்டிங் தேர்வு செய்வார்கள். பேட்டிங்கை தேர்வு செய்யும் அணியே வெற்றியும் பெறும் என்பது தான் இதுநாள் வரை நடந்து வந்திருப்பது.

ஆனால் ஜனவரி 5ஆம் தேதி புனேவில் இருக்கும் மகாராஷ்ட்ரா கிரிக்கெட் அசோசியேசன் ஸ்டேடியத்தில் ஆடும் போது இந்திய அணி டாஸ் வென்றாலும் , பவுலிங்கைத் தேர்வு செய்தது.

அன்றைய ஆட்டத்தில் இந்திய அணி பவுலிங்கைத் தேர்வு செய்து பவுலிங்கில் கோட்டை விட்டதும் முக்கியமான ட்ராபேக்.இப்படியாக இந்திய அணி இரண்டாவது டி 20 போட்டியில் 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவின் இந்த முடிவு அங்கேயே பலரால் சலசலப்புக்கு உள்ளானாலும் , இந்த போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்ததும் அடுத்தடுத்து இதையே காரணம் சொல்லி அவருடைய கேப்டன்சி சரியில்லை என்ற விமர்சனத்தை கிளப்பி விட்டனர்.

கேப்டன்சியை கோட் செய்து இந்திய அணிக்கே எச்சரிக்கை விடுத்துள்ளார் இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் காம்பீர். ஹர்திக் பாண்ட்யாவை கேப்டனாக நியமித்திருக்கும் நிலையில் , அவர் தொடர்ந்து மைதானத்தில் களத்தைச் சந்திக்க வேண்டும் , ஓய்வு கிடையாது. ஒரு வேளை அவருக்கு காயம் ஏற்பட்டால் அவரைப்போன்ற ஒரு ஃபெண்டாஸ்டிக் வேகப்பந்து வீச்சாளரை இழக்க நேரிடும். இது இந்திய அணிக்கு மிகப்பெரும் பாதிப்பு. அவர் கேப்டனாக இருக்கும் பட்சத்தில் , அட்லீஸ்ட் அவரைப் போல் ஆடும் ஒருவரை இந்திய அணி கண்டுபிடிக்க வேண்டும் என்று கேப்டன்சி விசயத்தில் தன் கருத்தை கூறியிருக்கிறார் கவுதம் காம்பீர்.

Hardik Pandya captaincy and comments

இந்திய அணியில் இளம் வீரர்களை கட்டமைக்கும் முயற்சியில் பிசிசிஐ இறங்கியுள்ளது. அதெல்லாம் சரி , ஆனால் ஹர்திக்கைப் போல் இன்னொருவருக்கும் கேப்டனாகும் தகுதி உள்ளது என ஸ்ரேயஸ் ஐயரை கை காண்பித்திருக்கிறார் முன்னாள் கிரிக்கெட் வீர்ர அபிஷேக் நாயர். அதில் அவர் ஹர்திக் மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர் மற்றும் ஆல்ரவுண்டர். அவரை கேப்டனாக நியமித்தது தவறு. ஸ்ரேயஸ் அயரின் ஆட்டத்தைப் பார்த்தோம் என்றால் , அவர் மிகச்சிறப்பாய் ஆடியிருக்கிறார். அவர் மைதானத்தின் எல்லா சூழ்நிலைகளையும் சிறப்பாய்க் கையாண்டிருக்கிறார். அவர் இருந்திருக்கலாம் என்று சொல்லியிருக்கிறார் முன்னாள் கிரிக்கெட் வீரர் அபிஷேக் நாயர்.

அதேபோல் இந்திய அணியின் முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா , ’ஏன் இந்திய அணியின் கேப்டனாக வரும் அனைவரும் உடனடியாக அணியின் விளையாடும் முறையை மாற்ற நினைக்கிறீர்கள் என்ற கேள்வியை பாண்ட்யாவை நோக்கி வைத்தார். அதற்கு தினேஷ் கார்த்திக் வேற லெவல் கூலாக 2007 க்கு பின்னதான உலக கோப்பையை டி 20 ல் நாம் இன்னும் வெல்லவில்லை. ஆனால் நம்மிடம் சிறந்த லீக் , சிறந்த வீரர்கள் உள்ளனர். அதனால் ஒவ்வொரு முறையும் மாற்றி இதன் மூலம் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாதா ? “ என்பது தான் என்ற பாசிட்டிவ்வான பதிலைக்கூறியுள்ளார்.

இப்படியாக பலரும் இந்திய அணியின் இளம் கேப்டன் ஹர்திக் குறித்து பலவிதமான கருத்துக்களை சொல்லி வந்தாலும் , அஸ்வின் சொல்லியிருப்பது தான் டாப் ட்ரெண்டிங்காக மாறியிருக்கிறது.

ஆம் , இந்திய அணியில் மிக குறுகியகாலத்தில் கேப்டனாக ஹர்திக் மைதானத்தில் மிஸ்டர் கூலாக வலம் வருகிறார். அவர் அனைத்தையும் நிதானமாக கையாள்கிறார். ஒரு அணியின் பலம் என்பதே எல்லோருடனும் ஒற்றுமையோடு மைதானத்தில் செயல்படுவது . அது ஹர்திக் பாண்ட்யாவின் தலைமையின் கீழ் மிகச்சிறப்பாக இருக்கிறது.

அவர் ஒரு தேர்ந்த கிரிக்கெட் வீரர். அவருடைய கேப்டன்சி சூப்பர் என்று சொல்லி இளம் வீரர்களுக்கும் ஹர்திக்கும் தன் பேச்சால் பூஸ்ட் அப் செய்திருக்கிறார் அஸ்வின்.

இப்படியாக இந்திய அணியின் இளம் கேப்டனாக செயல்பட்டு வரும் ஹர்திக் பாண்ட்யாவின் கேப்டன்சி குறித்து பலரும் பல கருத்துக்களை சொல்லி வந்தாலும், ஹர்திக் மிகச்சிறந்த டி 20 ஆட்டத்தின் நுணுக்கங்களைத் தெரிந்த வீரர் என்ற கருத்தை தான் பலரும் சொல்கிறார்கள். 2022-ஆம் ஆண்டு ஐபிஎல் -ன் போதே குஜராத் டைட்டன்ஸ் வெற்றி பற்றி பேசும் போதே, ஹர்திக்கின் டி 20 ஆட்டமுறையைப் பற்றி பலரும் புகழ்ந்து பேசியதும் குறிப்பிடத்தக்கது.

ஆனாலும் இதையெல்லாம் விட , இலங்கை அணிக்கு எதிரான கடைசி டி 20 ஆட்டம் இன்று (ஜனவரி 7 ) ராஜ்கோட்டில் இருக்கும் சவுராஸ்ட்ரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இதில் இந்திய அணிக்கு வெற்றியைப் பெற்றுத்தருவது தான் முக்கியம் என்கிறார்கள் கிரிக்கெட் ரசிகர்கள்.

பவித்ரா பாலசுப்ரமணியன்

ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சியை பாராட்டிய அஷ்வின்

”விஜய் மட்டுமல்ல, அஜித்தும் சூப்பர் ஸ்டார் தான்” சரத்குமார்

+1
0
+1
0
+1
0
+1
1
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *