TNPL: குருசாமி அஜிதேஷ் அதிரடி- கடைசி ஓவரில் ட்விஸ்ட்!

Published On:

| By Jegadeesh

தமிழ்நாடு ப்ரீமியர் லீக் தொடர் கடந்த ஜூன் 12 ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி, நேற்று(ஜூன் 16) நடைபெற்ற ஆட்டத்தில் லைக்கா கோவை கிங்ஸ் மற்றும் நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதின.

இதில் முதலில் களமிறங்கிய கோவை அணி 6 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்கள் எடுத்தது.

அந்த அணியின் அதிரடி ஆட்டக்காரர் சாய் சுதர்ஷன் 52 பந்துகளில் 7 பவுண்டரி 4 சிக்ஸர் என மொத்தம் 90 ரன்கள் குவித்தார்.

இதன் மூலம் சாய் சுதர்ஷன் தமிழ்நாடு ப்ரீமியர் லீக் போட்டியின் 11 வது அரைசதத்தை பதிவு செய்தார்.

தொடர்ந்து சாய் சுதர்ஷன் தனது விக்கெட்டை பறிகொடுக்க அடுத்ததாக ஷாருக்கான் 17 ரன்களில் ஆட்டம் இழந்தார்.

பின்னர், 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம்கண்டது நெல்லை ராயல் கிங்ஸ் அணி.

அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் அருண் கார்த்திக் டக் அவுட் முறையில் வெளியேற ஈஸ்வரன் 3 ரன்களிலும், ஸ்ரீ நிரஞ்சன் 25 ரன்கள் எடுத்து தங்களது விக்கெட்டை பறிகொடுத்தனர்.

ஒரு பக்கம் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தாலும் மறு புறம் நெல்லை ராயல் கிங்ஸ் அணிக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக குருசாமி அஜிதேஷ் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களை உற்சாக படுத்தினர்.

இதில் குருசாமி அஜிதேஷ் 60 பந்துகளை சந்தித்து 8 சிக்ஸர் , 7 பவுண்டரிகள் என 112 ரன்களை விளாசினார்.

இந்நிலையில், கடைசி ஓவரில் நெல்லை அணிக்கு வெற்றி இலக்கை அடைய 12 ரன்கள் தேவை பட்ட போது குருசாமி அஜிதேஷ் 4 வது பந்தில் தனது விக்கெட்டை பறிகொடுத்து நெல்லை அணி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தினார்.

அப்போது 2 பந்துகளில் 7 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற சூழால் ஏற்பட்டது. அப்போது களமிறங்கிய பொய்யாமொழி முதல் பந்திலேயே ஒரு சிக்ஸரை பறக்கவிட களம் சூடானது.

ஒரு பந்தில் ஒரு ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் விளையாடியது நெல்லை.

அதேபோல் கடைசி பந்தில் பொய்யாமொழி ஒரு சிங்கிள் அடிக்க நெல்லை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

கிச்சன் கீர்த்தனா: கிழங்கு கட்லெட்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel