கேண்டிடேட்ஸ் செஸ் போட்டி: சாதனை படைத்த குகேஷ்

விளையாட்டு

கனடாவில் நடைபெற்ற கேண்டிடேட்ஸ் செஸ் தொடரை தமிழகத்தின் கிராண்ட் மாஸ்டர் குகேஷ் வென்று சாதனை படைத்துள்ளார்.

கேண்டிடேட்ஸ் சர்வதேச செஸ் போட்டி கனடாவின் டொரொண்டோவில் ஏப்ரல் 3-ஆம் தேதி துவங்கி நடைபெற்று வந்தது.

இந்த தொடரில் நேற்று நடைபெற்ற 13-வது சுற்றின் முடிவில் தமிழகத்தை சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் குகேஷ் 8.5 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்தார்.

இந்தநிலையில், 14-வது மற்றும் இறுதிச் சுற்று ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் அமெரிக்காவின் நகருராவை கருப்பு நிற காய்களுடன் குகேஷ் எதிர்கொண்டு ஆட்டத்தை டிரா செய்தார். இதனால் இருவரும் தலா அரை புள்ளிகள் பெற்றனர்.

மறுபுறம் நெபோம்நியாச்சி – பேபியோனா காருனா ஆகியோர் இடையிலான இறுதிப் போட்டியும் டிரா ஆனது. இது குகேஷிற்கு சாதகமாக அமைய, 14 சுற்று முடிவில் 9 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருந்த குகேஷ் சாம்பியன் பட்டத்தை வென்றார்.

இந்தியாவின் முன்னாள் உலக செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்திற்கு பிறகு கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற வீரர் என்ற பெருமையை குகேஷ் பெற்றுள்ளார்.

கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியதன் மூலம், உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் சீனாவின் டிங் லிரெனை குகேஷ் எதிர்கொள்கிறார்.

இந்தநிலையில், விஸ்வநாதன் ஆனந்த் குகேஷுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், “இளம் வயதில் சாதனை படைத்துள்ள குகேஷுக்கு வாழ்த்துக்கள். இந்த போட்டியில் நீங்கள் விளையாடியதையும் , கடினமான சூழலை கையாண்டதையும் பார்த்து தனிப்பட்ட முறையில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். இந்த தருணத்தை கொண்டாடுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஜான்சன் & ஜான்சன் 375 கோடி ரூபாய் நஷ்டஈடு வழங்க உத்தரவு: காரணம் என்ன?

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *