செஸ் ஒலிம்பியாட் தொடரின் தனிநபர் பிரிவில் தமிழக வீரர் குகேஷ் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 29-ம் தேதி முதல் மாமல்லபுரத்தில் உள்ள ஃபோர் பாயின்ட்ஸ் ரிசார்ட்டில் செஸ் போட்டிகள் நடந்து வருகின்றன.
இதுவரை 10 சுற்று ஆட்டங்கள் முடிவடைந்துள்ள நிலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் இறுதி சுற்றான 11 ஆம் சுற்று ஆட்டம் இன்று நடைபெற்றது.
தனிநபர் பிரிவின் முதல் போர்டில் தமிழ்நாட்டை சேர்ந்த குகேஷ் தங்கம் வென்று அசத்தியுள்ளார்.
இரண்டாம் போர்டில் நிகால் சரினும் தனிநபர் பிரிவில் தங்கம் வென்றுள்ளார்.
அர்ஜுன் எரிகேசி வெள்ளிப் பதக்கமும், பிரக்ஞானந்தா, வைஷாலி, தானியா சச்தேவ் மற்றும் திவ்யா தேஷ்முக் ஆகிய நால்வரும் வெண்கல பதக்கங்களை வென்றுள்ளனர்.
- க.சீனிவாசன்
செஸ் ஒலிம்பியாட்: இந்திய அணிகளுக்கு வெண்கலப் பதக்கம்!