Gukesh Indian chess player cm mk stalin

இந்தியாவின் நம்பர் ஒன் செஸ் வீரர் குகேஷுக்கு முதல்வர் வாழ்த்து!

தமிழகம் விளையாட்டு

செஸ் கிராண்ட்மாஸ்டர் குகேஷுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 4) வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் நம்பர் ஒன் செஸ் வீரர் என்ற இடத்தை தமிழக வீரர் குகேஷ் கைப்பற்றியுள்ளார். உலக செஸ் போட்டி வீரர்கள் தரவரிசைப் பட்டியலில் 9-வது இடத்துக்கு முன்னேறியதன் மூலம் இந்தியாவுக்கான பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ளார்.

இந்தியாவில் செஸ் வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்த விஸ்வநாதன் ஆனந்த் இதன்மூலம் இரண்டாவது இடத்துக்குச் சென்றுள்ளார்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற எயிம்செஸ் ரேபிட் போட்டியில் உலக சாம்பியனாக உள்ள கார்ல்சனை வீழ்த்திய இளம் வீரர் என்கிற சாதனையையும் படைத்திருந்தார் தமிழக வீரர் குகேஷ்.

இந்நிலையில், செஸ் கிராண்ட்மாஸ்டர் குகேஷுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள ட்விட்டர் (எக்ஸ்) பதிவில், “உலக செஸ் ஜாம்பவான்கள் பட்டியலில் டாப் 10 இடத்திற்கு முன்னேறியுள்ள, வீரர் குகேஷுக்கு என் வாழ்த்துகள்; திறமையும், உறுதியும்தான் உங்களை மிக சிறந்த வீரராக உயர்த்தியுள்ளது;

உங்களின் இந்த சாதனை உலகெங்கிலும் உள்ள இளம் வீரர்களுக்கு உத்வேகத்தை அளித்ததுடன், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளது!” எனத் தெரிவித்துள்ளார்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

உக்ரைன் துறைமுகம் மீது ரஷ்யா தாக்குதல்: 40,000 டன் தானியங்கள் சேதம்!

எடப்பாடியின் அருமை தெரியவில்லை: செல்லூர் ராஜூவுக்கு அண்ணாமலை பதில்!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0