உலகக்கோப்பை செஸ் தொடரில் தமிழ்நாட்டு வீரர் குகேஷ் காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
FIDE உலகக் கோப்பை செஸ் தொடர் அஜர்பைஜான் தலைநகர் பாகுவில் கடந்த மாதம் 30ஆம் தேதி முதல் நடந்து வருகிறது.
இன்று (ஆகஸ்ட் 13) நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய 5வது சுற்றில் தமிழக வீரரான குகேஷ், சீனாவின் வாங் ஹாவுடன் மோதி வெற்றி பெற்றார்.
இதன் மூலம் குகேஷ், காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார். அதே வேளையில், உக்ரைனின் வாசில் இவான்சுக்கை தோற்கடித்து முன்னாள் உலக சாம்பியனும், உலகின் நம்பர் 10 வீரருமான மேக்னஸ் கார்ல்சனை காலிறுதிக்கு முன்னேறினார்.
இதனையடுத்து வரும் 15ந்தேதி நடக்கும் காலிறுதி போட்டியில் மேக்னஸ் கார்ல்சனை எதிர்கொள்கிறார் குகேஷ்.
கிறிஸ்டோபர் ஜெமா