மும்பையை வீழ்த்துமா குஜராத்?

Published On:

| By Jegadeesh

கடந்த மார்ச் 31 ஆம் தேதி தொடங்கிய ஐபிஎல் 16 வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதில் 10 புள்ளிகளுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலிடத்திலும் , எட்டு புள்ளிகளுடன் ராஜஸ்தான் ராயல்ஸ் இரண்டாவது இடத்திலும் உள்ளது.

இந்நிலையில், இன்று (ஏப்ரல் 25) நடைபெறும் 35 வது போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திரமோடி மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன.

ஐந்து முறை ஐபிஎல் கோப்பையை வென்றுள்ள மும்பை அணி நடப்பு தொடரை சற்று தடுமாற்றத்துடனேயே தொடங்கியுள்ளது.

இதுவரை 6 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் வென்று புள்ளிப்பட்டியலில் 7வது இடத்தை பிடித்துள்ளது. பேட்டிங்கில் இஷான் கிஷன், கேமரூன் க்ரீன் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

திலக் வர்மா மற்றும் நேஹல் வதேரா ஆகிய இளம் வீரர்களும் நம்பிக்கை அளிக்கின்றனர். ஆனால், ஆர்ச்சர், பெஹ்ரெண்ட்ரோஃப் ஆகிய பந்துவீச்சாளர்கள் இதுவரை எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை.

இவர்கள் ரன்களை வாரி வழங்கி வருவது மும்பை அணிக்கு பெரிய தலைவலியாக மாறி உள்ளது. பியூஷ் சாவ்லா மட்டுமே பந்துவீச்சில் நம்பிக்கை அளிக்கும் விதமாக செயல்படுகிறார்.

குஜராத் அணி நடப்பு தொடரில் இதுவரை 4 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது. ஆரம்பத்தில் தொடர் வெற்றிகளை குவித்தாலும் கடந்த சில போட்டிகளில் குஜராத் அணி சற்றே தடுமாறி உள்ளது. ஷுப்மன் கில், விஜய் சங்கர் மற்றும் டேவிட் மில்லர் ஆகியோர் பேட்டிங்கில் நல்ல ஃபார்மில் இருக்க, ஷமி, ரஷித் கான் மற்றும் மோகித் சர்மா ஆகியோர் பந்துவீச்சில் வலுசேர்க்கின்றனர்.

மும்பை இந்தியன்ஸ் உத்தேச ஆடும் 11 வீரர்கள்

ரோகித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன், கேமரூன் க்ரீன், சூர்யகுமார் யாதவ், டிம் டேவிட், திலக் வர்மா, ஜோஃப்ரா ஆர்ச்சர், பியூஷ் சாவ்லா, ஹிருத்திக் ஷோக்கீன், அர்ஜுன் டெண்டுல்கர், ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப்.

குஜராத் டைட்டன்ஸ் உத்தேச ஆடும் 11 வீரர்கள்

விருத்திமான் சாஹா, ஷுப்மான் கில், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), அபினவ் மனோகர், விஜய் சங்கர், டேவிட் மில்லர், ராகுல் தெவாடியா, ரஷித் கான், முகமது ஷமி, நூர் அகமது, மோகித் சர்மா.

மு.வா.ஜெகதீஸ் குமார்

குட்கா வழக்கு: கிடங்குக்கு சீல் – மனு தள்ளுபடி!

யாத்திசை பார்த்த சீமான்: சொன்னது என்ன?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share