ஹர்திக் பாண்டியாவை போல மற்றொரு வீரரையும் குஜராத் அணியில் இருந்து வாங்குவதற்கு, மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ந்து முயற்சித்து வருகிறது.
குஜராத் அணியின் கேப்டனாக சிறந்த முறையில் செயல்பட்ட ஹர்திக் பாண்டியாவை முட்டி மோதி வாங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி, குஜராத்தின் மற்றொரு சிறந்த வீரரான ஷமிக்கும் ஸ்கெட்ச் போட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
மினி ஏலத்திற்கு முன்பு ஷமியையும் பணம் கொடுத்து வாங்க அந்த அணி நேரடி பேச்சுவார்த்தை நடத்தி இருப்பதாக கிரிக்கெட் வட்டாரங்களில் வெளியான தகவல்கள் அதிர வைத்துள்ளன.
ஏனெனில் ஐபிஎல் விதிகளின் படி வீரர்களிடம் அணிகள் பேச்சுவார்த்தை நடத்தக்கூடாது. ஆனால் அதையும் மீறி மும்பை அணி இப்படி செய்துள்ளது.
இதுகுறித்து குஜராத் அணியின் சிஓஓ அரவிந்தர் சிங், ”எந்தவொரு அணியும் வீரர்களை மற்ற அணிகளில் இருந்து வாங்க முதலில் பிசிசிஐ-யிடம் விண்ணப்பம் அளிக்க வேண்டும்.
பின்னர் சம்மந்தப்பட்ட அணிக்கு அந்த தகவல் பரிமாறப்படும். அதை ஏற்பதும், நிராகரிப்பதும் அணிகளின் விருப்பம். ஆனால் அப்படி இல்லாமல் எங்கள் அணியின் சிறந்த வீரர் ஷமியிடம் ஐபிஎல் அணி ஒன்று நேரடி பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறது.
அவரிடம் டிரேடிங் முறையில் அணி மாறுவதற்காக பேசப்பட்ட தகவல் எங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. வீரர்களை அணி நிர்வாகம் தொடர்பு கொண்டு பேசுவது சிறந்ததல்ல,” என காட்டமாக கருத்து தெரிவித்து உள்ளார்.
அரவிந்தர் அணியின் பெயரை வெளிப்படையாக சொல்லாவிட்டாலும் கூட அது மும்பை அணி தான் என்பது தற்போது வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது.
நடந்து முடிந்த உலகக்கோப்பை தொடரில் ஷமி இந்திய அணி இறுதிப்போட்டி வரை செல்வதற்கு மிகுந்த உறுதுணையாக இருந்தார்.
இதனால் தான் அவரை தங்கள் அணிக்கு எடுக்க மும்பை இந்தியன்ஸ் பல்வேறு வழிகளில் முயற்சி செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
-மஞ்சுளா
வெற்றிமாறன் இயக்கம், அட்லி வசனம்: ஜிவி பிரகாஷ் செம அப்டேட்!
IPL2024: தோனியின் இடத்தை நிரப்ப… 3 வீரர்களை டார்கெட் செய்யும் சென்னை அணி?