த்ரில் வெற்றி பெற்ற குஜராத் அணி!

Published On:

| By Jegadeesh

ஐபிஎல் தொடரின் 16வது சீசனின் 30 வது லீக் போட்டி இன்று(ஏப்ரல் 22)மலை.3.30 மணிக்கு லக்னோவில் உள்ள அடல் பிகாரி வாஜ்பாய் மைதானத்தில் தொடங்கியது.

இதில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது . அதன்படி முதலில் பேட்டிங்கை தொடங்கிய குஜராத் அணி லக்னோ அணியின் பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் ரன்கள் எடுக்க திணறியது.

சும்மான் கில் ரன் கணக்கை தொடங்காமலே ஆட்டமிழந்த நிலையில் அபினவ் மனோகர் 3 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அதனைத் தொடர்ந்து களமிறங்கிய விஜய் சங்கர் 10 ரன்களிலும், மில்லர் 6 ரன்களிலும் ஆட்டமிழந்த நிலையில், அதிரடியாக விளையாடி அரைசதத்தை நெருங்கிய விருத்திமான் சஹா 37 பந்துகளில் 47 ரன்களில் ஆட்டமிழந்தார்.

ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும் மறுமுனையில் அவ்வப்போது பவுண்டரி விரட்டிய கேப்டன் ஹர்திக் பாண்டியா 50 பந்துகளில் 66 ரன்கள் குவித்தார்.

நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்களில் குஜராத் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் எடுத்தது.

லக்னோ அணி தரப்பில் குணால் பாண்டியா, ஸ்டொயினிஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், நவீன் உல ஹக், மிஸ்ரா ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து 136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 128 ரன்கள் மட்டுமே எடுத்தது. கடைசி ஓவரில், லக்னோ அணிக்கு 12 ரன்கள் தேவைப்பட்டது.

2வது மற்றும் 3வது பந்துகளில், கே.எல்.ராகுல் மற்றும் மார்கஸ் ஸ்டாய்னிஸ் வெளியேற, இறுதியாக 128 ரன்கள் மட்டுமே எடுத்த லக்னோ அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத்திடம் வீழ்ந்தது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

லியோ இசை வெளியீடு எங்கு? விஜய்யின் திட்டம் என்ன?

அரசு பங்களாவை காலி செய்த ராகுல்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment