2025 சாம்பியன்ஸ் டிராபி தொடர் அடுத்த மாதம் 19 ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைமை செயல் அதிகாரி ஜெஃப் அலார்டிஸ் தனது பதவியில் இருந்து விலகியுள்ளார். ground renovation work not completed
இதற்கு காரணம்.. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான ஏற்பாடுகளை முறையாக செய்யாததே என்றும் சொல்கிறார்கள். பாகிஸ்தானில் இருந்து வெளியாகும் ஆங்கில நாளிதழான ‘டான்’ இன்று (ஜன 29)வெளியிட்டுள்ள செய்தியில், குறிப்பிட்ட காலத்துக்குள் மைதானங்களின் பணிகள் முடிவடைவது சாத்தியமல்ல என்றும் கூறியுள்ளது.
அதே வேளையில், பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தலைவர் மோஷின் நக்வி ராவல்பிண்டி மைனத்தை இன்று பார்வையிட்டார். பிறகு, செய்தியாளர்களிடத்தில், ”குறிப்பிட்ட காலக்கெடுவான ஜனவரி 31 ஆம் தேதிக்குள் ராவல் பிண்டி, கராச்சி, லாகூர் மைமானங்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வரும்” என்றார்.
மைதானங்களில் புனரமைப்பு பணிகளுக்கான ஒப்பந்தத்தை எடுத்துள்ள பிலால் ஷோகன் என்பவர் கூறுகையில், ”புனரமைப்பு பணிகளுக்கு ஒப்புதல் கிடைக்கவும், தேவையான கருவிகள் கிடைக்கவும் தாமதாமானதுதான் குளறுபடிகளுக்கு காரணம்” என்கிறார்.
சாம்பியன்ஸ் டிராபி தொடர் கராச்சி, லாகூர், ராவல்பிண்டி மைதானங்களில் நடைபெறுகிறது. புனரமைப்பு பணிகளுக்காக பல கோடிகள் ஒதுக்கப்பட்டிருந்தது. எனினும், குறிப்பிட்ட நேரத்தில் பணிகள் முடியாததால், ஐசிசி தலைமை செயல் அதிகாரி தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிகிறது.