ரோஹித் சர்மாவை உண்மையான GOAT என மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி வீரர் புகழ்ந்திருக்கிறார்.
நேற்று(ஜனவரி 17) நடந்த ஆப்கானிஸ்தான்- இந்தியா இடையிலான 3-வது டி20 போட்டியில் இந்திய அணி சூப்பர் ஓவர் வரை சென்று வென்றது.
இதன் மூலம் இந்த டி2௦ தொடரை ரோஹித் தலைமையிலான இந்திய அணி 3-௦ என வென்றுள்ளது. இதன் வழியாக ரோஹித் தற்போது பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரராகி இருக்கிறார்.
இந்த நிலையில் தற்போது மும்பை அணியின் அதிரடி வீரர் சூர்யகுமார் யாதவ் அறுவைசிகிச்சை முடிந்து, இந்த போட்டியை கண்டு ரசித்துள்ள விவரம் வெளியாகியுள்ளது.
அதோடு போட்டிக்கு பின்னர் ரோஹித் புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்து, ” Respect” என கேப்ஷன் கொடுத்து GOAT புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
டி2௦ தொடரில் சுமார் 14 மாதங்களுக்கு பிறகு கம்பேக் கொடுத்த ரோஹித், இந்த டி2௦ தொடரை வென்று சாதனை படைத்துள்ளார்.
அதை பாராட்டும் விதமாகத்தான் சூர்யா இப்படி ஸ்டோரி வைத்துள்ளார் என நினைத்தாலும், மும்பை அணிக்குள் உள்ள பூசல்களை இது வெளிக்காட்டுவதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஒருபுறம் ஹர்திக் பாண்டியா இன்னும் முழு உடற்தகுதியை எட்டவில்லை. மறுபுறம் சூர்யகுமார் யாதவும் அறுவைசிகிச்சை முடிந்து ஓய்வில் இருக்கிறார்.
இதனால் மும்பை அணியின் கேப்டன் குறித்த பஞ்சாயத்து இன்னும் ஓயாத நேரத்தில், சூர்யகுமார் இந்த ஸ்டோரியை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
–மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
நாடாளுமன்றத் தேர்தல்: காங்கிரஸ் தேர்தல் குழு அறிவிப்பு!
ஜனவரி 22 : மத்திய அரசு அலுவலகங்களுக்கு அரை நாள் விடுமுறை!