ஜெர்மனி அணியின் கோல்கீப்பராக இருப்பவர் மனுவேல் நிவூவர். இவர் ஜெர்மனியின் புகழ்பெற்ற கால்பந்து அணியான பேயர்ன்முனிச் அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த 21 சீசன்களில் அந்த அணிக்காக 923 கிளப் ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.
அதோடு, ஜெர்மனி அணிக்காக 124 சர்வதேச போட்டிகளிலும் களம் கண்டுள்ளார். 38 வயதில் கிட்டத்தட்ட ஆயிரம் கால்பந்து போட்டிகளுக்கு மேல் விளையாடியும் ஒரு முறை அவர் நேரடி ரெட் கார்டு பெற்றதில்லை. இந்த நிலையில், முதன்முறையாக மனுவேல் நேரடி ரெட் கார்டு காட்டப்பட்டு களத்தை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளார்.
ஜெர்மனி கோப்பைக்கான தொடரில் பேயர்ன்முனிச் அணியுடன் பேயர்லெவர்குஷன் அணி மோதியது. இந்த போட்டியின் 17 வது நிமிடத்தில் பேயர்ன் முனிச் கோல்கீப்பர் மனுவேல் நிவூவர் பெனால்டி பாக்ஸை விட்டு வெளியே வந்து பந்தை கட்டுப்படுத்த முயன்று கொண்டிருந்த லெவர்குஷன் வீரர் ஜெர்மி பிரிம்ஹாமை தனது உடலை கொண்டு இடித்து தள்ளினார்.
இதையடுத்து, பவுல் ஆட்டம் ஆடிய அவருக்கு நடுவர் நேரடி ரெட் கார்டு கொடுத்து களத்தை விட்டு வெளியேற்றினார். இதனால், பேயர்ன்முனிச் 10 வீரர்களுடன் ஆட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது. இதனால், லெவர்குஷன் அணிக்கு வெற்றி எளிதாகி போனது. 69வது நிமிடத்தில் அடித்த கோல் மூலம் வெள்ளி பெற்றது. நடப்பு தொடரில் பேயர்ன் முனிச் சந்திக்கும் முதல் தோல்வி இதுவாகும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
-எம்.குமரேசன்
உலகின் பணக்கார விளையாட்டு வீரர்…கிரிக்கெட்டுக்கு முழுக்கு… யார் இந்த ஆர்யமான்?
எதிர்க்கட்சித் தலைவரின் உரிமை மறுக்கப்படுகிறது : ராகுல் காட்டம்!