கடந்த 91 ஆண்டுகளில் முதன் முறையாக மிக மோசமான தோல்வியை நியூசிலாந்து அணியிடம் இந்திய அணி பெற்றுள்ளது. இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் பயிற்சியாளர் கம்பீர் தான் என்று ரசிகர்கள் புலம்பி வருகிற்னர். அதோடு, பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து கம்பீர் விலக வேண்டும் என்று ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர்
டெஸ்ட் போட்டிகளில் ஆடிய போதே கம்பீர் மிகப்பெரிய அளவில் ரன்களை எடுத்தது கிடையாது. இதனால் கம்பீர் எப்படி டெஸ்ட் அணிக்கு பயிற்சி தருவார் என்று ஏற்கனவே கேள்வி எழுந்திருந்தது. ரோகித் சர்மா, ராகுல் டிராவிட் தான் டெஸ்ட் அணியின் பயிற்சியாளராக நீடிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். ஆனால், ராகுல் டிராவிட் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை.
இப்போதாவது பிசிசிஐ விழித்துக் கொண்டு , கம்பீரை, டி20 மற்றும் ஒரு நாள் போட்டியின் தலைமை பயிற்சியாளராக நியமித்து விட்டு, டெஸ்ட் ஜாம்பவான் லக்ஷமனை இந்திய டெஸ்ட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக கொண்டு வாருங்கள் என்று ரசிகர்கள் வலியுறுத்தியுள்ளனர். கம்பீரை விட டெஸ்ட் கிரிக்கெட்டில் லக்ஷ்மன் மிகச்சிறந்த அனுபவம் கொண்டவர். சுழற்பந்துவீச்சை எதிர்கொள்வதில் வல்லவர். இதனால் லக்ஷ்மன் பயிற்சியாளராக வந்தால் இந்திய அணி வீரர்களுக்கு பலமாக அமையும் என்கின்றனர்.
கிரேக் சேப்பல் பயிற்சியாளராக இருந்த போது, இந்திய அணிக்கும், வீரர்களுக்கும் மோசமான அனுபவம் கிடைத்தது. அதே போலவே, கவுதம் கம்பீர் பொறுப்பேற்ற 3 மாதங்களில், இன்னொரு கிரேக் சேப்பலாக மாறி அணியை அழித்து வருவதாக ரசிகர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
மயங்கி விழுந்த மாணவிகள்… தனியார் பள்ளியில் மீண்டும் வாயுக்கசிவு? : பெற்றோர் முற்றுகை!
டெபாசிட் போனது மட்டும் 1 கோடி… 245 வது முறையாக களம் இறங்கும் பத்மராஜன்