இளம்வீரர் ஒருவருக்காக தோனி-கம்பீர் இருவரும் நேரடி மோதலில் இறங்கி இருப்பதாகக் கூறப்படுகிறது.
தன்னுடைய கடைசி ஐபிஎல் தொடர் என்பதால் முடிந்தவரை அணியை வலுப்படுத்தும் வேலைகளில் தோனி இறங்கியுள்ளார். இதனால் தான் இளம்வீரர்கள் பலரும் சென்னை அணியால் வாங்கப்பட்டுள்ளனர்.
அதேபோல நீண்டநாள் கழித்து கொல்கத்தா அணியை வழிநடத்தும் பொறுப்பை அந்த அணியின் முன்னாள் கேப்டன் கவுதம் கம்பீர் ஏற்றுக்கொண்டு இருக்கிறார்.
இதனால் முதல் ஆண்டிலேயே கோப்பையை தட்டித்தூக்கிட பயங்கரமாக ஸ்கெட்ச் போட்டு வருகிறார். அவரின் ஆலோசனைப்படி தான் வீரர்களை கொல்கத்தா அணி ஏலத்தில் எடுத்துள்ளது.
இந்த நிலையில் இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடித்து அசத்தலாக ஆடிவரும் சர்பராஸ் கானை ஏலத்தில் எடுத்திட தோனி, கம்பீர் இருவரும் முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது.
மிடில் ஆர்டரை மேலும் வலுவாக்கும் வகையில் தங்களது அணிக்கு கானை எடுத்திட சென்னை, கொல்கத்தா இரண்டு அணிகளும் போட்டிபோட்டு வருகின்றதாம்.
சுவாரஸ்யமாக அவரை மீண்டும் அணியில் எடுப்பதற்கு, கானின் முன்னாள் அணி பெங்களூரும் முயற்சி செய்து வருவதாக கூறப்படுகின்றது.
இந்த பந்தயத்தில் எந்த அணி முந்திக்கொண்டு கானை அணியில் சேர்க்கப்போகிறது? என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்து விடும்.
கடந்த டிசம்பரில் நடைபெற்ற மினி ஐபிஎல் ஏலத்தில் சர்பராஸ் கானை எந்தவொரு அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை. ஆனால் தற்போது அவரை வாங்குவதற்கு ஒவ்வொரு அணியும் போட்டிபோடுகின்றன.
வாழ்க்கை ஒரு வட்டம்னு சும்மாவா சொன்னாங்க…
-மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…