கங்குலி, ஜெய்ஷா பதவியில் தொடர அனுமதி!

விளையாட்டு

பிசிசிஐ விதிமுறைகளில் திருத்தம் மேற்கொள்ள பிசிசிஐக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவராக முன்னாள் கிரிக்கெட் வீரர் செளரவ் கங்குலியும், செயலாளராக மத்திய அமைச்சர் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷாவும் உள்ளனர்.

செளரவ் கங்குலி ஏற்கெனவே மேற்குவங்க கிரிக்கெட் சங்கத்தில் 5 ஆண்டுகளுக்கும் மேலாகப் பதவி வகித்துள்ளாா்.

அதுபோல், ஜெய் ஷா குஜராத் கிரிக்கெட் சங்கத்தில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பதவி வகித்துள்ளாா்.

இந்நிலையில், பிசிசிஐ நிர்வாகிகளின் பதவிக்காலம் முடிந்தவுடனேயே, அவர்களால் அந்தப் பதவிகளில் தொடர முடியாது. குறிப்பிட்ட காலத்திற்கு பிறகே, அவர்கள் மீண்டும் அந்த பதவியில் தொடரும் வகையில் விதி உள்ளது.

அதாவது, ஒருவா் பிசிசிஐ அல்லது மாநில கிரிக்கெட் சங்கத்தில் அல்லது இரண்டிலும் சோ்த்து தொடா்ந்து 6 ஆண்டுகள் பதவி வகித்தால், அடுத்த 3 ஆண்டுகள் இடைவெளி விட்டுத்தான் மீண்டும் ஏதேனும் நிா்வாகப் பொறுப்புக்கு வர முடியும்.

அப்படிப் பார்த்தால், கங்குலி மற்றும் ஜெய் ஷா ஆகியோரின் மூன்றாண்டு பதவிக் காலம் விரைவில் முடிவடைய இருக்கிறது. இதனால் அவர்கள் இருவரும் பதவி விலக நேரிடும்.

ganguly jayshah to stay in bcci office supreme court judgement

இதையடுத்து அவர்களின் பதவிக் காலத்தை மேலும் நீட்டிக்க வழி செய்யும் வகையில், நீதிபதி லோதா கமிட்டி பரிந்துரையின் அடிப்படையில் அமல்படுத்தப்பட்ட 3 ஆண்டுகள் கட்டாய ஓய்வு (இடைவெளி) நடைமுறையை,

தற்காலிகமாக ஒருமுறை நீக்கும் வகையில் திருத்தம் மேற்கொள்ள பிசிசிஐ பொதுக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

பின்னா், திருத்தப்பட்ட புதிய விதிமுறைக்கு அனுமதி கேட்டு பிசிசிஐ சாா்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

மேலும், பிசிசிஐ நிா்வாகிகளின் பதவிக் காலத்தை நீட்டிக்க வழிசெய்யும் வகையில் விதிமுறைகள் திருத்தப்பட்ட விவகாரத்தில் நீதிமன்றத்துக்கான பாரபட்சமற்ற ஆலோசகராக மூத்த வழக்கறிஞர் மனீந்தா் சிங்கை உச்சநீதிமன்றம் கடந்த ஜூலை மாதம் நியமித்தது.

இந்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நேற்று (செப்டம்பர் 14) விசாரணைக்கு வந்தது.

அப்போது, பிசிசிஐ விதிமுறைகளில் திருத்தம் மேற்கொள்ள பிசிசிஐக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

அதாவது, “மாநில கிரிக்கெட்டில் 6 ஆண்டுகள், பிசிசிஐயில் 6 ஆண்டுகள் தொடர்ச்சியாக 12 ஆண்டுகள் ஒரு நபர் பொறுப்பில் இருக்கலாம்” என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

இதையடுத்து கங்குலி, ஜெய் ஷா ஆகிய இருவரும் தங்களுடைய பதவிகளில் மேலும் மூன்று வருட காலம் பணியாற்ற சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது.

ஜெ.பிரகாஷ்

தாதா கங்குலியின் கிரிக்கெட் தருணங்கள்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0