பாகிஸ்தான் பந்து வீச்சாளர் ஷகீன் அஃப்ரிடி வீசும் பந்துகளை அடித்து ஆட வேண்டும்” என இந்திய அணியின் முன்னாள் வீரரும் எம்.பியுமான கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
8வது டி20 ஓவர் உலகக் கோப்பை போட்டி வரும் அக்டோபர் 16ம் தேதி முதல் நவம்பர் 13ம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கிறது.
இதில் விளையாடுவதற்காக ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, கடந்த அக்டோபர் 6ம் தேதி ஆஸ்திரேலியா புறப்பட்டுச் சென்றது.
உலகக் கோப்பைப் போட்டி தொடங்குவதற்கு முன்பு இந்திய அணி நான்கு பயிற்சி ஆட்டங்களில் விளையாடி வருகிறது.
இதில் மேற்கு ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான கடந்த அக்டோபர் 10ம் தேதி நடைபெற்ற முதலாவது பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இன்று (அக்டோபர் 13) அதே அணிக்கு எதிராக தோல்வியைத் தழுவியது.
இதனால் இந்திய அணி தற்போதே கடுமையான விமர்சனங்களைச் சந்தித்து வருகிறது. ஏற்கெனவே பும்ரா, ஜடேஜா ஆகியோரின் விலகலே பெரிதாகப் பேசப்பட்ட நிலையில்,
பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி தோற்றதும் பேசுபொருளாக மாறியிருக்கிறது.
இந்த நிலையில், “பாகிஸ்தான் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஷகீன் அஃப்ரிடியின் பந்துவீச்சை ஆக்ரோஷமாக எதிர்கொள்ள வேண்டும்” என இந்திய அணியின் முன்னாள் வீரரும் எம்.பியுமான கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி, பரம எதிரியான பாகிஸ்தானை வரும் அக்டோபர் 23ம் தேதி எதிர்கொள்ள இருக்கிறது.
இதைவைத்தே இந்திய வீரர்களுக்கு நம்பிக்கை தரும் விதத்தில் கெளதம் காம்பீர் பேசியிருக்கிறார்.
இதுகுறித்து ஸ்டார் ஸ்போர்ட்ஸின் கேம் பிளான் நிகழ்ச்சியில் பேசிய கௌதம் கம்பீர், “முழங்கால் காயம் காரணமாக ஆசியக் கோப்பையில் விலகி இருந்த ஷகீன் அஃப்ரிடி (பாகிஸ்தான் வீரர்), டி20 உலகக் கோப்பையில் விளையாடுவார். அவரது வருகை இந்திய அணிக்கு சவாலைத் தரும்.
ஆகையால், நம் பேட்டர்கள் மிகவும் கவனமாக இருப்பது நல்லது. ஷகீன் அஃப்ரிடியின் பந்து வீச்சை கடந்து செல்ல நினைக்கக்கூடாது. அவரது பந்துவீச்சை நம் பேட்டர்கள் அடித்து ஆட வேண்டும்.
புதிய பந்தில் அவரது பந்துவீச்சு பேட்ஸ்மேன்களுக்கு ஆபத்தானது. இருப்பினும், நம் பேட்டர்கள் அதனை கவனமாக எதிர்கொண்டு ரன்களை குவிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
ஜெ.பிரகாஷ்
பேருக்குதான் நம்பர் ஒன் டீம்: ரவி சாஸ்திரி
பயிற்சி ஆட்டத்தில் இந்தியா தோல்வி: பதற்றத்தில் ரசிகர்கள்!