கத்தார் நாட்டில் ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
குரூப் ‘எஃப்’ பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பெல்ஜியம் அணி மொராக்கோ அணியிடம் 2-0 என தோல்வியடைந்தது. இதனால் பெல்ஜியம் ரசிகர்கள் கலவரத்தில் ஈடுபட்டது அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.
நேற்று (நவம்பர் 27 ) நடைபெற்ற குரூப் ’எஃப்’ பிரிவு போட்டியில் பலம் வாய்ந்த பெல்ஜியம் அணி, மொராக்கோ அணியை எதிர்த்து விளையாடியது. சர்வதேச தரவரிசை பட்டியலில் பெல்ஜியம் அணி இரண்டாவது இடத்தில் உள்ளது. மொராக்கோ அணி 22 ஆவது இடத்தில் உள்ளது.

எனவே, இந்த போட்டியில் பெல்ஜியம் எளிதாக வெற்றி பெற்று நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறும் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர்.
ஆனால் ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே மொராக்கோ அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, பெல்ஜியம் அணிக்கு கடும் நெருக்கடியை கொடுத்தது. ஆட்டத்தின் முதல் பாதியில் பெல்ஜியம் அணியை கோல் அடிக்க விடாமல் தடுத்த மொராக்கோ, இரண்டாவது பாதியில் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தி, இரண்டு கோல்கள் அடித்து பெல்ஜியத்திற்கு அதிர்ச்சி அளித்தது.
இறுதியில் 2-0 என்ற கோல் கணக்கில் மொரக்கோ அணி வெற்றி பெற்று பெல்ஜியம் அணியை வீழ்த்தியது. பெல்ஜியம் அணியின் இந்த அதிர்ச்சி தோல்வி, அந்நாட்டு ரசிகர்கள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தங்கள் அணி தோல்வி அடைந்த ஆத்திரத்தில் பெல்ஜியம் ரசிகர்கள் கடைகளை உடைத்து, வாகனங்களுங்கு தீவைத்தும் கலவரத்தில் ஈடுபட்டனர்.
பல ரசிகர்கள் ஆயுதங்களை வைத்துக்கொண்டு தலைநகர் ப்ருசல்ஸ்சின் முக்கிய பகுதிகளில் வன்முறை செயல்களில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து காவல்துறை தண்ணீரை பீய்ச்சியடித்தும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் கலவரக்காரர்களை விரட்டியடித்தனர்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் தனது அழகினை மேம்படுத்திய 5 இந்திய நடிகைகள் இவங்க தானா!