ஹர்திக் பாண்டியா ஐபிஎல் தொடரில் விளையாட மாட்டார் என நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இதனால் மும்பை இந்தியன்ஸ் நிலை தற்போது மிகவும் பரிதாபமாக மாறியுள்ளது.
கடந்த 10 வருடங்கள் கேப்டனாக இருந்து அந்த அணிக்கு 5 கோப்பைகளையும் ரோஹித் வென்று கொடுத்திருந்தார். ஆனால் இறுதிப்போட்டி வரை முன்னேறியும் உலகக்கோப்பையை அவர் வெல்லவில்லை.
மேலும் கடந்த ஐபிஎல்லில் மும்பை அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறவில்லை போன்ற காரணங்களால் கேப்டன் பதவியில் இருந்து விலக்கி அவருக்கு அதிர்ச்சி அளித்தது மும்பை.
அதோடு குஜராத் அணியில் இருந்த ஹர்திக்கை டிரேடிங் முறையில் ரூபாய் 15 கோடி கொடுத்து வாங்கி, கேப்டன் பதவியும் அவருக்கு அளித்து அழகு பார்த்தது மும்பை.
இது மும்பை அணியில் மிகுந்த சலசலப்பை ஏற்படுத்தியது. சூர்யகுமார், பும்ரா ஆகியோர் இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி வைத்து தங்களது வருத்தத்தை வெளிப்படுத்தி இருந்தனர்.
இந்த நிலையில், ‘வாழ்க்கை ஒரு வட்டம்’ என்பது போல ஹர்திக் பாண்டியா தற்போது உடற்தகுதி இல்லாமல் அவதிப்பட்டு வருகிறார்.
இதனால் மீண்டும் கேப்டன் தலைவலியில் மும்பை அணி சிக்கித்தவித்து வருகிறது. இதைப்பார்த்த ரசிகர்கள் மீம்ஸ் போட்டு சமூக வலைதளங்களில் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
அதில் ஒரு சில மீம்ஸ்களை கீழே பார்க்கலாம்.
10 வருஷம் கேப்டனா இருந்த என்னை தூக்கிட்டு அவன் வரணும்னு நினைச்சான் ல சார்..1 வருசம் வெளிய இருக்கட்டும் சார் pic.twitter.com/whIFJC1ecS
— Black cat (@Cat__offi) December 23, 2023
https://twitter.com/Cat__offi/status/1738484601566228918
https://twitter.com/Addanshayk/status/1738524257930322229
https://twitter.com/Ctrlmemes_/status/1738479247633842397
https://twitter.com/Inderjeityadav/status/1738530809697779833
https://twitter.com/GaurangBhardwa1/status/1738478699778031735
https://twitter.com/HaramiParindey/status/1738480128139907095
https://twitter.com/JunaidKhanation/status/1738487234679164979
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
-மஞ்சுளா
IPL 2024: விலகும் பாண்டியா? மீண்டும் கேப்டனாகும் ரோகித்?
இதுக்கொண்ணும் கொறைச்சல் கெடையாது… மும்பையை வறுக்கும் ரசிகர்கள்!