IPL Auction : அடுத்தாண்டு நடைபெற உள்ள 18வது ஐபிஎல் தொடரை முன்னிட்டு சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் உள்ள அபாடி அல் ஜோஹர் அரங்கத்தில் ஐபிஎல் மெகா ஏலம் இன்றும் (நவம்பர் 24), நாளையும் நடைபெறுகிறது.
இதில் ரிஷப் பந்த், கே எல் ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர் போன்ற முன்னணி இந்திய வீரர்களுடன் மொத்தம் மொத்தமாக 577 வீரர்கள் ஏலத்தில் பங்கேற்றுள்ளனர்.
ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு அணியும் ஏலத்துக்காக 120 கோடி ரூபாய் செலவு செய்யலாம். இருப்பினும் அனைத்து அணிகளும் வீரர்களை தக்கவைத்துக் கொள்வதற்காக கணிசமான தொகையை ஏற்கனவே பயன்படுத்தி விட்டதால் மீதமுள்ள தொகையுடன் ஏலத்தில் பங்கேற்றுள்ளன.
இந்த நிலையில் இன்று மதியம் 4 மணிக்கு தொடங்கிய ஐபிஎல் மெகா ஏலத்தில் முதல் வீரராக இந்தியாவைச் சேர்ந்த இளம் (25 வயது) வேகப்பந்து வீச்சாளரான அர்ஷ்தீப் சிங் ரூ. 18 கோடிக்கு ஆர்.டி.எம். முறையை பயன்படுத்தி பஞ்சாப் கிங்ஸ் அணி.
அதிகப்பட்சமாக இந்திய அணியின் விக்கெட் கீப்பரான ரிஷப் பந்தை ரூ. 27 கோடிக்கு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும், ஸ்ரேயாஷ் அய்யரை ரூ.26.75 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணியும் வாங்கியுள்ளது.
முதல் நாளில் மொத்தம் ஏலத்தில் 72 வீரர்கள் வாங்கப்பட்டனர் மற்றும் 12 வீரர்கள் எந்த அணியாலும் ஏலம் எடுக்கப்படவில்லை.
ஐபிஎல் 2025 ஏலத்தில் விற்கப்பட்ட வீரர்களின் முழுப் பட்டியல் :
ஷ்ரேயாஸ் ஐயர்: பஞ்சாப் கிங்ஸ் – ரூ 26.75 கோடி
அர்ஷ்தீப் சிங்: பஞ்சாப் கிங்ஸ் – ரூ 18 கோடி (ஆர்டிஎம்)
யுஸ்வேந்திர சாஹல்: பஞ்சாப் கிங்ஸ் – ரூ 18 கோடி
மார்கஸ் ஸ்டாய்னிஸ்: பஞ்சாப் கிங்ஸ் – ரூ 11 கோடி
நேஹால் வதேரா: பஞ்சாப் கிங்ஸ் – ரூ 4.2 கோடி
கிளென் மேக்ஸ்வெல்: பஞ்சாப் கிங்ஸ் – ரூ 4.2 கோடி
விஜய்குமார் வைஷாக்: பஞ்சாப் கிங்ஸ் – ரூ 1.8 கோடி
யாஷ் தாக்கூர்: பஞ்சாப் கிங்ஸ் – ரூ 1.6 கோடி
ஹர்பிரீத் ப்ரார்: பஞ்சாப் கிங்ஸ் – ரூ 1.5 கோடி
விஷ்ணு வினோத்: பஞ்சாப் கிங்ஸ் – ரூ 95 லட்சம்
பஞ்சாப் கிங்ஸ் அணியின் மீதமுள்ள தொகை :ரூ 22.50 கோடி
ஜோஸ் பட்லர்: குஜராத் டைட்டன்ஸ் – ரூ 15.75 கோடி
முகமது சிராஜ்: குஜராத் டைட்டன்ஸ் – ரூ 12.25 கோடி
ககிசோ ரபாடா: குஜராத் டைட்டன்ஸ் – ரூ 10.75 கோடி
பிரஷித் கிருஷ்ணா: குஜராத் டைட்டன்ஸ் – ரூ 9.5 கோடி
குமார் குஷாக்ரா: குஜராத் டைட்டன்ஸ் – ரூ 65 லட்சம்
நிஷாந்த் சிந்து: குஜராத் டைட்டன்ஸ் – ரூ 30 லட்சம்
மானவ் சுதர்: குஜராத் டைட்டன்ஸ் – ரூ 30 லட்சம்
குஜராத் டைட்டன்ஸ் அணியின் மீதமுள்ள தொகை :ரூ 17.50 கோடி
கேஎல் ராகுல்: டெல்லி கேபிட்டல்ஸ் – ரூ 14 கோடி
ஹாரி புரூக்: டெல்லி கேபிட்டல்ஸ் – ரூ 11.75 கோடி
மிட்செல் ஸ்டார்க்: டெல்லி கேபிட்டல்ஸ் – ரூ 11.75 கோடி
நடராஜன்: டெல்லி கேபிட்டல்ஸ் – ரூ 10.75 கோடி
ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க்: டெல்லி கேபிட்டல்ஸ் – ரூ 9 கோடி (ஆர்டிஎம்)
அசுதோஷ் சர்மா: டெல்லி கேபிட்டல்ஸ் – ரூ 3.8 கோடி
மோஹித் ஷர்மா: டெல்லி கேபிட்டல்ஸ் – ரூ 2.2 கோடி
சமீர் ரிஸ்வி: டெல்லி கேபிட்டல்ஸ் – ரூ 95 லட்சம்
கருண் நாயர்: டெல்லி கேபிட்டல்ஸ் – ரூ 50 லட்சம்
டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் மீதமுள்ள தொகை :ரூ 13.80 கோடி
ரிஷப் பந்த்: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் – ரூ 27 கோடி
ஆவேஷ் கான்: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் – ரூ 9.75 கோடி
டேவிட் மில்லர்: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் – ரூ 7.5 கோடி
அப்துல் சமத்: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் – ரூ 4.2 கோடி
மிட்செல் மார்ஷ்: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் – ரூ 3.40 கோடி
ஏய்டன் மார்க்ரம்: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் – ரூ 2 கோடி
ஆர்யன் ஜூயல்: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் – ரூ 30 லட்சம்
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் மீதமுள்ள தொகை :ரூ 14.85 கோடி
இஷான் கிஷன்: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – ரூ 11.25 கோடி
முகமது ஷமி: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – ரூ 10 கோடி
ஹர்ஷல் படேல்: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – ரூ 8 கோடி
அபினவ் மனோகர்: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – ரூ 3.20 கோடி
ராகுல் சாஹர்: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – ரூ 3.2 கோடி
ஆடம் ஜம்பா: சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: ரூ 2.4 கோடி
சிமர்ஜீத் சிங்: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – ரூ 1.5 கோடி
அதர்வா டைடே: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – ரூ 30 லட்சம்
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் மீதமுள்ள தொகை :ரூ 14.85 கோடி
ஜோஷ் ஹேசில்வுட்: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – ரூ 12.50 கோடி
ஃபில் சால்ட்: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – ரூ 11.5 கோடி
ஜித்தேஷ் ஷர்மா: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – ரூ.11 கோடி
லியாம் லிவிங்ஸ்டோன்: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – ரூ 8.75 கோடி
ரசிக் சலாம் தார்: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – ரூ 6 கோடி
சுயாஷ் சர்மா: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – ரூ 2.6 கோடி
அனுஜ் ராவத்: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – ரூ 30 லட்சம்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் மீதமுள்ள தொகை :ரூ 30.65 கோடி
நூர் அகமது: சென்னை சூப்பர் கிங்ஸ் – ரூ 10 கோடி
ரவிச்சந்திரன் அஸ்வின்: சென்னை சூப்பர் கிங்ஸ் – ரூ 9.75 கோடி
டெவான் கான்வே: சென்னை சூப்பர் கிங்ஸ் – ரூ 6.25 கோடி
கலீல் அகமது: சென்னை சூப்பர் கிங்ஸ் – ரூ 4.80 கோடி
ரச்சின் ரவீந்திரா: சென்னை சூப்பர் கிங்ஸ் – ரூ 4 கோடி (ஆர்டிஎம்)
ராகுல் திரிபாதி: சென்னை சூப்பர் கிங்ஸ் – ரூ 3.40 கோடி
விஜய் சங்கர்: சென்னை சூப்பர் கிங்ஸ் – ரூ 1.2 கோடி
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மீதமுள்ள தொகை :ரூ 15.60 கோடி
வெங்கடேஷ் ஐயர்: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – ரூ 23 கோடி
அன்ரிச் நார்ட்ஜே: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – ரூ 6.50 கோடி
குவிண்டன் டி காக்: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – ரூ 3.6 கோடி
ஆங்கிரிஷ் ரகுவன்ஷி: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – ரூ 3 கோடி
குர்பாஸ்: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – ரூ 2 கோடி
வைபவ் அரோரா: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – ரூ 1.8 கோடி
மயங்க் மார்கண்டே: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – ரூ 30 லட்சம்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் மீதமுள்ள தொகை :ரூ 10.05 கோடி
ஜோஃப்ரா ஆர்ச்சர்: ராஜஸ்தான் ராயல்ஸ் – ரூ 12.50 கோடி
வனிந்து ஹசரங்க: ராஜஸ்தான் ராயல்ஸ் – ரூ 5.25 கோடி
மகேஷ் தீக்ஷனா: ராஜஸ்தான் ராயல்ஸ் – ரூ 4.4 கோடி
மஹிபால் லோம்ரோர்: ராஜஸ்தான் ராயல்ஸ் – ரூ 1.7 கோடி
ஆகாஷ் மத்வால்: ராஜஸ்தான் ராயல்ஸ் – ரூ 1.2 கோடி
குமார் கார்த்திகேயா: ராஜஸ்தான் ராயல்ஸ் – ரூ 30 லட்சம்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் மீதமுள்ள தொகை :ரூ 17.35 கோடி
டிரென்ட் போல்ட்: மும்பை இந்தியன்ஸ் – ரூ 12.5 கோடி
நமன் திர்: மும்பை இந்தியன்ஸ் – ரூ 5.25 கோடி (ஆர்டிஎம்)
ராபின் மின்ஸ்: மும்பை இந்தியன்ஸ் – ரூ 65 லட்சம்
கர்ண் ஷர்மா: மும்பை இந்தியன்ஸ் – ரூ 50 லட்சம்
மும்பை இந்தியன்ஸ் அணியின் மீதமுள்ள தொகை :ரூ 26.10 கோடி
விற்கப்படாத வீரர்கள் விவரம்:
தேவ்தட் பாடிக்கல்
டேவிட் வார்னர்
ஜானி பேர்ஸ்டோ
யாஷ் துல்
பியூஷ் சாவ்லா
ஷ்ரேயாஸ் கோபால்
வக்கார் சலாம்கெயில்
அன்மோல்ப்ரீத் சிங்
உத்கர்ஷ் சிங்
உபேந்திர யாதவ்
லுவ்னித் சிசோடியா
கார்த்திக் தியாகி
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
”தயவுசெய்து விட்டுவிடுங்கள்” : அரசியல்வாதிகளுக்கு ஆர்.ஜே.பாலாஜி கோரிக்கை!
ஏ.ஆர்.ரகுமானை விட்டு பிரிந்தது ஏன்? : சாய்ரா பானு விளக்கம்!