மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) வருடாந்திர விருதுகள் வழங்கும் விழா நாளை (பிப்ரவரி 1) நடைபெற உள்ளது. இதில் மொத்தம் 26 பேருக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளது. full list of bcci award
இந்த நிகழ்ச்சியில் காட் ஆஃப் கிரிக்கெட் என்று அழைக்கப்படும் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு சி.கே. நாயுடு பெயரில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட உள்ளது.
சமீபத்தில் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு பிசிசிஐ சிறப்பு விருதுடன் கேடயம் வழங்கப்படுகிறது.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை எடுத்த தீப்தி ஷர்மா, அதிக ரன்களை குவித்த ஸ்மிருதி மந்தனா ஆகியோருக்கும் விருதுகள் வழங்கப்பட உள்ளது.
ஆண்கள் பிரிவில் சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரர் விருதான பாலி உம்ரிகர் விருது ஜஸ்பிரித் பும்ராவுக்கும், ஆண்கள் பிரிவில் சிறந்த அறிமுக வீரர் விருது சர்ப்ராஸ் கான், பெண்கள் பிரிவில் சிறந்த அறிமுக வீரர் விருது ஆஷா ஷோபனா ஆகியோருக்கு வழங்கப்பட உள்ளது. full
பிசிசிஐ வாழ்நாள் சாதனையாளர் விருது 1994-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இந்திய அணியின் முதல் கேப்டன் சி.கே.நாயுடுவை கெளரவிக்கும் விதமாக இந்த விருது வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.list of bcci award