ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த ஐபிஎல் தொடரானது, இன்னும் 13 தினங்களில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது.
முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னையை பெங்களூர் அணி எதிர்கொள்கிறது. இதற்காக இரண்டு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தற்போது சேப்பாக்கம் மைதானத்தில் தீவிரமாக பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
Stepping into Chepauk after a year, one could feel the excitement of Thala! #WhistlePodu #Yellove 🦁💛 pic.twitter.com/CczaDDktAK
— Chennai Super Kings (@ChennaiIPL) March 9, 2024
எந்த வருடமும் இல்லாத அளவிற்கு இந்த வருடம் பல்வேறு அணிகள் புதிய கேப்டன்களுடன் ஐபிஎல் தொடரில் களம் காணுகின்றன. இதில் பலரும் மிகவும் இளையவர்கள் என்பதால் இந்த ஐபிஎல் தொடர் உண்மையிலேயே ரசிகர்களுக்கு நல்லதொரு அனுபவத்தை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் ஐபிஎல் கேப்டன்களின் லேட்டஸ்ட் சம்பளம் குறித்த விவரங்கள் தற்போது தெரிய வந்துள்ளன. அதுகுறித்த முழுவிவரங்களை நாம் இங்கே பார்க்கலாம்.
பாப் டூ பிளசிஸ்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டன் பாப் டூ பிளசிஸ் ரூபாய் 7 கோடி சம்பளத்துடன் இந்த பட்டியலில் கடைசி இடத்தை பிடித்துள்ளார்.
சுப்மன் கில்
இந்த தொடரின் மிக இளவயது கேப்டனும், குஜராத் அணியின் புதிய கேப்டனுமான சுப்மன் கில் ரூபாய் 8 கோடி சம்பளத்துடன் இந்த லிஸ்டில் 9-வது இடத்தில் இருக்கிறார்.
ஷிகர் தவான்
பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷிகர் தவான் இந்த பட்டியலில் ரூபாய் 8.25 கோடி சம்பளத்துடன் 8-வது இடத்தினை பிடித்துள்ளார்.
மஹேந்திர சிங் தோனி
இந்த தொடரின் அதிக வயது கேப்டனும், ரசிகர்களின் ஆல்டைம் பேவரைட் வீரருமான தோனி ரூபாய் 12 கோடி சம்பளத்துடன் இந்த லிஸ்டில் 7-வது இடத்தில் இருக்கிறார்.
அவரின் பேவரைட் நம்பர் 7 என்பதாலும், சென்னை அணியின் பங்குதாரர்களில் தோனியும் ஒருவராக இருப்பதாலும், அவரின் சம்பளம் குறைவாக இருக்கிறதே என்று நாம் கவலை கொள்ளத்தேவையில்லை.
ஸ்ரேயாஸ் ஐயர்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் புதிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் இந்த பட்டியலில் ரூபாய் 12.25 கோடி சம்பளத்துடன், 6-வது இடத்தினை பிடித்துள்ளார்.
சஞ்சு சாம்சன்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் ரூபாய் 14 கோடி சம்பளத்துடன் இந்த லிஸ்டில் 5-வது இடத்தினை, தக்க வைத்துக்கொண்டு இருக்கிறார்.
ஹர்திக் பாண்டியா
மும்பை அணியின் புதிய கேப்டனும், ஆல்ரவுண்டருமான ஹர்திக் பாண்டியா இந்த பட்டியலில் ரூபாய் 15 கோடி சம்பளத்துடன், 4-வது இடத்தில் இருக்கிறார்.
ரிஷப் பண்ட்
டெல்லி கேபிடல்ஸ் அணியின் புதிய கேப்டனாக, மீண்டும் கம்பேக் கொடுத்திருக்கும் ‘குட்டி தோனி’ ரிஷப் பண்ட் ரூபாய் 16 கோடி சம்பளத்துடன், இந்த பட்டியலில் 3-வது இடத்தில் இருக்கிறார்.
கே.எல்.ராகுல்
‘தனி ஒருவன்’ என ரசிகர்களால் புகழப்படும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டன் ராகுல் ரூபாய் 17 கோடி சம்பளத்துடன், இந்த பட்டியலில் 2-வது இடத்தினை தக்க வைத்துக்கொண்டுள்ளார்.
பேட் கம்மின்ஸ்
உலகக்கோப்பை நாயகனும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனுமான பேட் கம்மின்ஸ் ரூபாய் 2௦.5௦ கோடி ரூபாய் சம்பளத்துடன் இந்த பட்டியலில் முதல் இடத்தை பிடித்திருக்கிறார். இதேபோல ஹைதராபாத் அணிக்காக ஐபிஎல் கோப்பையினையும் தட்டித் தூக்குவாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
–மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அப்பல்லோவில் இருந்து அஜித் டிஸ்சார்ஜ்!
திமுக – காங்கிரஸ் இடையே இன்று தொகுதி பங்கீடு? சென்னை வரும் டெல்லி தலைவர்கள்!