இந்தியா-ஆஸ்திரேலியா இடையே 3வது ஒருநாள் தொடரை முன்னிட்டு இலவச சிற்றுந்து சேவை ஒருநாள் வழங்கப்படும் என்று சென்னை மெட்ரோ இரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை மெட்ரோ இரயில் நிர்வாகம் தெரிவித்துள்ள அறிக்கையில், ”இந்தியா – ஆஸ்திரேலியா ஒருநாள் இரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நாளை(மார்ச் 21) நடைபெறவுள்ளது. இந்த போட்டியை காண ஏராளமான கிரிக்கெட் ரஏகர்கள் வருகை தருவார்கள்.
இற்காகவே சென்னை மெட்ரோ இரயில் அரசினர் தோட்டம் முதல் சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானம் வரை சிற்றுந்து சேவை வசதியை நாளை காலை 11:00 மணி முதல் கிரிக்கெட் போட்டி முடியும் வரை கிரிக்கெட் ரசிகர்களுக்காகவே செய்துள்ளது.

22-03-2023 அன்று மட்டும் மெட்ரோ இரயில் சேவை நெரிசல்மிகு நேரமான மாலை 5:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை உள்ள நெரிசல்மிகு நேரத்தை
இரவு 10:00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த தருணத்தில், சென்னை மெட்ரோ இரயில் வாகன நிறுத்தும் இடங்களை பயன்படுத்திக்கொள்ளலாம். சென்னை பெருநகர மக்களும், கிரிக்கெட்
ரசிகர்களும், பொதுமக்களும், மெட்ரோ இரயில் நிர்வாகம் செய்துள்ள இந்த வசதிகளை பயன்படுத்தி கொள்ளலாம்.” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
80,000 போலீசார் இருந்தும் அம்ரித் தப்பியது எப்படி?: உயர்நீதிமன்றம் கேள்வி