ஃபார்முலா 4 ரேஸ்.. விறுவிறுப்பாக நடைபெற்ற தகுதி சுற்றுப் போட்டிகள்!

Published On:

| By Minnambalam Login1

formula 4 race

சென்னை தீவுத்திடலில் நேற்று இரவு ஆரம்பித்த ஃபார்முலா 4 கார் பந்தயத்தின் பயிற்சி சுற்று இன்று (செப்டம்பர் 1) காலை முடிவடைந்ததை அடுத்து இரண்டு தகுதிச் சுற்றுகளும் முடிவடைந்துள்ளன.

இந்தியாவிலே முதல் முறையாக இரவில் நடத்தப்படும் ஃபார்முலா 4 கார் பந்தயத்தை, ரேஸிங்க் பிரமோஷன்ஸ் பிரைவேட் லிமிடட்(Racing Promotions Private Limited) மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இணைந்து நடத்துகிறது.

இந்த ஃபார்முலா 4 பந்தயத்தின் கீழ் இந்தியன் ரேஸிங்க் லீக்(Indian Racing League), ஃபார்முலா 4 இந்தியன் சாம்பியன்ஷிப் (Formula 4 Indian Championship) மற்றும் ஃபார்முலா எல்ஜிபி 4(Formula LGB 4) ஆகிய மூன்று பந்தயங்கள் நடைபெறும்.

இந்த பந்தயம் நடத்துவதற்கான எஃப்.ஐ.ஏ.(Federation Internationale de l’Automobile) அனுமதி நேற்று மதியம் 12 மணிக்குள் கிடைத்துவிடும் என்று சொல்லப்பட்டது.

ஆனால், மிகவும் தாமதமாக மாலை 6 மணிக்கு தான் அனுமதி கிடைத்தது. இதனால் மதியம் 2.30 மணிக்கு ஆரம்பிக்க வேண்டிய கார் பந்தயத்தை விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மாலை 6 மணிக்கு மேல் தொடங்கி வைத்தார்.

இப்படி தாமதமாகத் தொடங்கப்பட்ட பந்தயத்தின் பயிற்சி சுற்று உடனடியாக ஆரம்பிக்கவில்லை. மாறாக ஏறத்தாழ ஒன்றரை மணி நேரம் கழித்துத் தான் தொடங்கியது. இதனால் பயிற்சி சுற்றின் முதல் பகுதி மட்டும் தான் நேற்று இரவு நடந்தது.

இந்த நிலையில் தான் நேற்று (ஆகஸ்ட் 31) இழந்த நேரத்தை ஈடு செய்ய, இன்று காலை 10 மணி அளவில் மீதமிருந்த பயிற்சி சுற்றுகள் நடந்தன. இதனை அடுத்து ஃபார்முலா 4 இந்தியன் சாம்பியன்ஷிப் மற்றும் ஃபார்முலா எல்ஜிபி 4 க்கான இரண்டு தகுதி சுற்றுகள் முடிவடைந்துள்ளன. மூன்றாவது தகுதி சுற்று நடைபெற்ற பிறகு பிரதான போட்டி சுற்றுகள் தொடங்கும்.

முன்னதாக போட்டி நடக்கும் வழித்தடத்தை ஆராய்ந்த எஃப்.ஐ.ஏ-வின் உறுப்பினர் கிசப் மியுசியோனி 19 வளைவுகள் கொண்ட வழித்தடத்திலிருந்த குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி, அவைகளைச் சரி செய்யச் சொன்னார். இதுவும் பந்தயம் தாமதமாகத் தொடங்குவதற்கான காரணமாக அமைந்தது.

அப்துல் ரஹ்மான்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

கல்லூரி மாணவர்கள் குடியிருப்பில் கஞ்சா… களமிறங்கிய1000 போலீசார்: என்ன நடந்தது?

திமுக முப்பெரும் விழா  அறிவிப்பு: யார் யாருக்கு எந்தெந்த விருது?

நடிகை மினு முனீரின் பாலியல் குற்றச்சாட்டு: மறுத்த மலையாள நடிகர் ஜெயசூர்யா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share