CSK Vs DC: டெல்லிக்கு எதிராக களமிறங்கும் இளம்வீரர்… தோனிக்கு என்னாச்சு?

விளையாட்டு

டெல்லிக்கு எதிரான போட்டியில் தோனி விக்கெட் கீப்பிங் செய்ய மாட்டார் என, தகவல்கள் வெளியாகி உள்ளன.

இன்று (மார்ச் 31) ருதுராஜ் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

விசாகப்பட்டினம் இரண்டு அணிகளுக்குமே சொந்த மைதானம் இல்லை. இதுவரையிலான போட்டிகளில் வென்ற அனைத்து அணிகளுமே சொந்த மைதானத்தில் தான் தங்களது வெற்றிகளை பதிவு செய்துள்ளன. ( பெங்களூரு அணி விதிவிலக்கு)

இதனால் இன்றைய ஆட்டத்தில் எந்த அணி வெல்லப்போகிறது என்பது தெரியவில்லை. மீண்டும் பார்முக்கு வர வேண்டும் என்பதால் டெல்லி அணி வெற்றிக்கு கடுமையாக போராடும்.

அதேநேரம் ஹாட்ரிக் வெற்றியினை பதிவு செய்திட சென்னை அணியும் பெரும் போராட்டத்தை நிகழ்த்தக்கூடும். எனவே இன்றைய ஆட்டம் ரசிகர்களுக்கு ஒரு நல்ல விருந்தாக அமையக்கூடும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தநிலையில் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும்விதமாக, தோனி இன்று விக்கெட் கீப்பிங் செய்ய மாட்டார் என கூறப்படுகிறது.

இதனை நிரூபிப்பது போல 18 வயதான இளம்வீரர் ஆரவல்லி அவனிஷ் விக்கெட் கீப்பிங் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

ருதுராஜ், ரச்சின், மிட்செல், ரஹானே, துபே, ஜடேஜா, ரிஸ்வி என சென்னை அணியின் பேட்டிங் நல்ல லைன் அப்பினை கொண்டுள்ளது. இதனால் தோனி பேட்டிங் ஆடவேண்டிய அவசியமில்லை.

எனவே தான் முதல் இரண்டு போட்டிகளில் சொந்த மண்ணான சென்னையிலும் அவர் பேட்டிங் செய்ய களமிறங்கவில்லை. தற்போது விக்கெட் கீப்பிங்கிலும் அவனிஷை பழக்குவதற்காக இன்று அவர் ஆட மாட்டார் என தெரிகிறது.

மறுபுறம் தோனி சமீபத்தில் முழங்காலில் மேற்கொண்ட அறுவைசிகிச்சை காரணமாக ஓய்வு தேவை என்றும், அதனால் தான் இன்று அவர் களமிறங்க வாய்ப்பில்லை என்றும் கூறுகின்றனர்.

என்றாலும் வழக்கம்போல பயிற்சியில் அவனிஷ் இறங்குவது போன்ற பிம்பத்தினை ஏற்படுத்தி விட்டு, தோனி விக்கெட் கீப்பிங்கில் களமிறங்க வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிகிறது.

எது எப்படியோ இன்று இரவு 7 மணிக்கு தோனி ஆட்டத்தில் இருக்கிறாரா? இல்லையா? என்ற கேள்விக்கான விடை தெரிந்து விடும் என்பதால் அதுவரை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

-மஞ்சுளா 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கெஜ்ரிவால் பாஜகவில் இணைந்தால் புனிதர்: உத்தவ் தாக்கரே பேச்சு!

புதுச்சேரியில் பரிதாபம்: சுவர் இடிந்து விழுந்து மூவர் பலி!

Aadujeevitham: படைத்த புதிய சாதனை… யாராலும் தடுக்க முடியாது போல!

+1
0
+1
2
+1
0
+1
1
+1
1
+1
0
+1
2