உலகக்கோப்பை கால்பந்து திருவிழாவில் ஈரானை வீழ்த்திய இங்கிலாந்து, பல்வேறு சாதனைகளையும் படைத்துள்ளது.
22 வது உலகக்கோப்பை கால்பந்து திருவிழா அரபு நாடான கத்தாரில் கடந்த நவம்பர் 20ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது.
இந்த தொடர், டிசம்பர் 18 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் 32 அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.
லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்கு முந்தைய நாக்-அவுட் (ரவுண்ட் 16) சுற்றுக்கு தகுதி பெறும்.
இந்த நிலையில் நேற்று நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து மற்றும் ஈரான் அணிகள் களமிறங்கின.
இதில், ஆட்டத்தின் ஆரம்பம் முதலே இங்கிலாந்து அணி ஆதிக்கம் செலுத்தியது. ஆட்டத்தின் முதல் பாதியில் இங்கிலாந்து 3 கோல்கள் அடித்து முன்னிலை வகித்தது.
ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் அந்த அணி மேலும் 3 கோல்கள் அடித்து அசத்தியது. ஈரான் அணியால் இரண்டு கோல்களை மட்டுமே அடிக்க முடிந்தது. இதனையடுத்து, ஆட்ட நேர முடிவில் 6-2 கோல் கணக்கில் ஈரானை இங்கிலாந்து வீழ்த்தியது.
நேற்று நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியது.
இந்தப் போட்டியில் இங்கிலாந்து வீரர் 21 வயதான புகாயோ இரண்டு கோல் அடித்தார்.
மற்றொரு வீரரான பெல்லிங்ஹாம் ஒரு கோல் அடித்தார். இதன்மூலம், உலகக்கோப்பை கால்பந்தில் இங்கிலாந்து அணிக்காக இளம் வயதில் கோல் அடித்த இரண்டாவது வீரர் என்ற சாதனையை பெல்லிங்ஹாம் படைத்தார்.
அவருக்கு 19 வயது 45 நாட்கள். இதற்கு முன்பு, 18 வயது 190 நாட்களில் மைக்கேல் ஓவன் சாதனை படைத்திருந்தார். இங்கிலாந்து உலகக்கோப்பை வரலாற்றில் ஒரே போட்டியில் 21 வயதுக்குட்பட்ட இரு வீரர்கள் (புகாயோ, பெல்லிங்ஹாம்) நேற்று கோல் அடித்திருப்பது இதுவே முதல் முறை.
1966க்குப் பின் உலகக்கோப்பை போட்டிகளில் முதல் 45 நிமிடங்களில் அதிக முறை பந்தை பாஸ் செய்த அணி வரிசையில் இங்கிலாந்து இரண்டாவது இடம் பெற்றது. நேற்றுடன் 366 முறை பாஸ் செய்துள்ளது. இதற்கு முன்பு, 2018ஆம் ஆண்டு ரஷ்யாவுக்கு எதிராக 395 முறை பாஸ் செய்த ஸ்பெயின் முதலிடத்தில் உள்ளது.
ஜெ.பிரகாஷ்
ஜல்லிக்கட்டு வீரர்களின் ஆசை… நிறைவேற்ற தயாராகும் சசிகுமார்
கிச்சன் கீர்த்தனா : அகத்திக்கீரை குழம்பு