தமிழக கால்பந்து வீராங்கனை பிரியா மரணம்!

விளையாட்டு

சென்னையில் அறுவை சிகிச்சையின் போது வலது கால் அகற்றப்பட்ட கால்பந்தாட்ட விளையாட்டு வீராங்கனை பிரியா இன்று (நவம்பர் 15) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த கால்பந்து விளையாட்டு வீராங்கனை பிரியா (17) குயின் மேரி கல்லூரியில் படித்து வந்தார். அவர் கடந்த மாதம் 20-ந்தேதி பயிற்சியில் ஈடுபட்டபோது வலது காலில் சுளுக்கு ஏற்பட்டது போல் வலி ஏற்பட்டுள்ளது.

பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு கடந்த 7ம் தேதி மூட்டு சவ்வு சீரமைப்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

அதனைதொடர்ந்து அவரது வலது காலில் வீக்கம் ஏற்பட்டது. இதன்காரணமாக மூட்டுக்கு மேல் பகுதியிலிருந்து பிரியாவின் வலது கால் அகற்றப்பட்டது.

பின்னர் மேல் சிகிச்சைக்காக கடந்த நவம்பர் 8-ஆம் தேதி சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பிரியா அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட காலில் ரத்த ஓட்ட பாதிப்பு இருந்ததை அடுத்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்தநிலையில், நேற்று இரவு முதல் சிறுநீரகம், ஈரல், இதயம் போன்ற பகுதியில் பாதிக்கப்பட்டு மாணவியின் உடல்நிலையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இன்று காலை 7.15 மணியளவில் பிரியா உயிரிழந்தார்.

இதனால் அவரது உறவினர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். மேலும் பிரியாவின் உயிரிழப்புக்கு தவறான சிகிச்சை அளித்த மருத்தவர்களின் அலட்சியமே காரணம் என்றும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கூறியும் புகார் அளித்துள்ளனர்.

செல்வம்

காலாவதியான தடுப்பூசிகள் : தமிழக அரசு எடுத்த முடிவு!

சபரிமலைக்கு சிறப்புப் பேருந்துகள்!

+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0
+1
0