இறுதிக்கட்டத்தில் கால்பந்து போட்டி : வெல்லப்போவது யார்?

விளையாட்டு

கத்தாரில் உலக கோப்பை கால்பந்து போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது.

32 அணிகளாக நவம்பர் 20 ஆம் தேதி தொடங்கிய போட்டியானது ஒவ்வொரு கட்டங்களாக நடைபெற்று இறுதிப்போட்டியில் தற்போது கால்பந்து சாம்ராஜ்ஜியத்தின் பலம் வாய்ந்த இரு அணிகளான ஃப்ரான்ஸ் மற்றும் அர்ஜெண்டினா மோத இருக்கிறது.

அதிலும் அனைவரும் எதிர்பார்த்த அணிகளே இறுதிப்போட்டிக்கு வந்திருக்கிறார்கள் என்கிறார்கள் கால்பந்து விமர்சகர்கள்.

டிசம்பர் 13 ஆம் தேதி நடைபெற்ற ஆட்டத்தில் 3-0 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா அணி.

டிசம்பர் 14 ஆம் தேதி ஆட்டத்தில் மோதிய ஃப்ரான்ஸ் வெர்சஸ் மொரோக்கா அணிகளில் ஃப்ரான்ஸ் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு வந்தது.

அதுவும் நேற்றைய ஆட்டத்தை பார்க்கும் போது மொரோக்கா அணியானது கிட்ட தட்ட எப்படியாவது வெற்றி பெற்று இறுதி ஆட்டத்துக்கு போக வேண்டும் என்று தான் ஆடியது.

ஆப்பிரிக்க நாட்டின் அட்லஸ் லயன்ஸ் என்று அழைக்கப்படும் மொரோக்கா அணியானது ஃப்ரான்ஸை எதிர்த்து நேற்று ஆடிய ஆட்டத்தில், கிட்டதட்ட 13 ஷாட்களை அடித்து சுமார் 575 பாஸ்களை மைதானத்தில் ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த 2022 உலக கோப்பை ஆரம்பத்ததிலிருந்தே மொரோக்கா ஆடிய அனைத்து ஆட்டங்களிலும் எளிதாக பார்த்திருக்கலாம். எப்படியென்றால், எதிர்த்து ஆடுவது எந்த அணியாக இருந்தாலும் ஒரு கோல் கூட எடுக்க விடாமல் ஆடியிருப்பார்கள் மொரோக்கா அணி.

மொரோக்காவின் ஆட்டத்தை கணக்கில் வைத்துப் பார்க்கும் போது , டிசம்பர் 17 ல் நடக்கும் மூன்றாம் இடத்தைப் பிடிக்கும் ப்ளே ஆஃப்-ல் மொரோக்கா வெல்வதற்கு அதிக வாய்ப்பிருக்கிறது என்றும் சொல்கிறார்கள் .

ஆக இறுதிப்போட்டியில் மோதும் அர்ஜெண்டினா மற்றும் ஃப்ரான்ஸ் அணியின் ஆட்டங்கள் கண்டிப்பாக அதிசூடு பரக்கும் ஆட்டங்களாக தான் கண்டிப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள் கால்பந்து விமர்சகர்கள்.

அதிலும் அர்ஜெண்டினாவும் ஃப்ரான்ஸூம் மோதிய சீரிய ஆட்டங்களில் பெரும்பாலும் இரண்டு அணிகளும் தங்களின் பலத்தை சீராக காண்பித்திருப்பார்கள்.

உதாரணமாக 1978 ல் அர்ஜண்டினாவும் , ஃப்ரான்ஸூம் மோதிய ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் அர்ஜெண்டினா குரூப் சுற்றில் அதிரடி காண்பித்திருப்பார்கள்.அந்த ஆட்டத்தில் அர்ஜெண்டினாவும் , ஃப்ரான்ஸூம் மைதானத்தை சுற்றி சுற்றி ஆடி ரசிகர்களின் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Football Finals Who Will Win?

அது மட்டுமல்லாது 2018 உலகக்கோப்பை ரவுண்ட் ஆஃப் 16 போட்டியில் ஃப்ரான்ஸ் அணியானது 4 கோல்கள் என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருக்கும், ஆனாலும் அர்ஜெண்டினா அணியானது 3 கோல்கள் அடித்து ஃப்ரான்ஸுக்கு இணையான ஆட்டத்தைக் கொடுத்திருப்பார்கள்….

இந்த இரண்டு அணிகளுக்குமிடையேயான ஆட்டமானது இன்று வரை பரபரப்பாக பார்க்கப்படுவதற்கு மத்தியில் , இந்த இறுதி ஆட்டம் கண்டிப்பாக கால்பந்து வரலாற்றில் ஒரு மைல்கல்லை ஏற்படுத்தும் என்று நம்பியிருக்கிறார்கள் முன்னாள் கால்பந்து வீரர்கள்.

கிட்டதட்ட 1930 லிருந்து நடைபெறும் கால்பந்து உலக கோப்பை போட்டிகளில் அர்ஜெண்டினாவே ரன்னர் அப்பாக வந்திருப்பார்கள்.

அதன்பின்பு 1978 மற்றும் 1986 ல் அர்ஜெண்டினா சாம்பியானாகியிருக்கிறது.அது மட்டுமில்லாமல் கிட்ட தட்ட மூன்று முறை ரன்னர் அப்பாகவும் இருந்திருக்கிறார்கள்.

அதே போல் ஃப்ரான்ஸை எடுத்துப்பார்க்கும் போது அவர்களின் அணியானது 1998 மற்றும் 2018 அதாவது நடப்பு சாம்பியானாக இறுதி ஆட்டத்தில் களமிறங்க இருக்கிறார்கள். ஃப்ரான்ஸ் ஒரு முறை மட்டுமே ரன்னர் அப்பாகவும் இருந்திருக்கிறது.

இப்படி இரு அணியின் பங்களிப்பும் உலக கோப்பையில் பார்க்கும் போது இணையாக இருக்கும் பட்சத்தில் ஆட்டம் சரியான சமமான போட்டியாக இருக்கும் என்பது தான் தீர்க்கமான கணிப்பு.

அர்ஜெண்டினா அணியைப் பார்க்கும் போது மெஸ்ஸி தலைமையிலான அணியில் மிட் ஃபீல்டராக இருக்கட்டும், பார்வேர்டர் , டிஃபெண்டர்கள் அனைவரும் தனித்துவம் மற்றும் சிறப்பாகவும் இருப்பார்கள்.

குறிப்பாக டிஃபென்ஸில் ஆடும் போது நிக்கோலஸ் ஓட்டமண்டி , கிறிஸ்டியன் ரொமேரா , நாஹுயல் மொலினா லாதுரோ மார்டினஸ் ஈடு இணை யாரும் கிடையாது.

இவர்களின் பலமும் மெஸ்ஸியின் அசுரத்தனமான பாஸை பார்க்கும் போது அர்ஜெண்டினா வெற்றி பெறும் என்று சொல்லியிருக்கிறார்கள்.

ஆக லூசைல் மைதானத்தில் டிசம்பர் 18 ஆம் தேதி என்ன நடக்கும் என்பதனை பொறுத்திருந்து பார்க்கலாம்.

இவர்கள் மோத இருக்கும் இந்த வருடம் உலகக் கோப்பை இறுதிப் போட்டி எப்படி இருக்கும் என்பதனை டிசம்பர் 18 லூசைல் மைதானத்தில் பார்க்கலாம்.

பவித்ரா பாலசுப்ரமணியன்

’பிச்சைக்காரன் 2 ’க்கு கிடைத்த ரூ.20 கோடி

இயக்குநர் பாடி ஷேமிங்: மன்னிப்பு கேட்ட மம்மூட்டி

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *