ஒரு போட்டிக்கு 7.5 லட்சம் பீஸ்… பண மழையில் ஐ.பி.எல் வீரர்கள்… சென்னை அணியில் யார் யார்?
ஐ.பி.எல் தொடரில் முதல் முறையாக வீரர்களுக்கு போட்டி கட்டணம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு போட்டிக்கு ரூ.7.5 லட்சம் கட்டணமாக வழங்கப்படுகிறது.
ஐ.பி.எல் மெகா ஏலம் நடைபெறுவதை முன்னிட்டு அணிகள் தக்க வைத்துக் கொள்ளும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளன. சென்னை அணியில் தோனி , ருதுராஜ், சிவம் துபே, ஜடேஜா, பதிரானா ஆகியோர் தக்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதில், தோனி அன்கேப்டு வீரர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளார். அதாவது சர்வதேச போட்டிகளில் விளையாடி 5 ஆண்டுகள் ஆவதால், அன்கேப்டு வீரராக மாறியுள்ள அவருக்கு 4 கோடி மட்டுமே சம்பளமாக வழங்கப்படும். கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், ரவீந்தர ஜடேஜா ஆகியோருக்கு 18 கோடி ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பந்து வீச்சளாளர் மதீஷா பதிரானா 13 கோடிக்கும் சிவம் துபே 12 கோடிக்கும் தக்க வைக்கப்பட்டுள்ளனர்.
மும்பை அணியில் ரோகித் சர்மா 16.30 கோடிக்கும் ஹர்திக் பாண்ட்யா 16.35 கோடிக்கும் பும்ரா 18 கோடிக்கும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். திலக் 8 கோடிக்கும் சூர்ய குமார் 16.35 கோடிக்கும் தக்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த ஐ.பி.எல் தொடரில் முதன் முறையாக வீரர்கள் விளையாடும் ஒவ்வொரு ஆட்டத்துக்கும் போட்டி கட்டணமாக 7.5 லட்சம் வழங்கப்படுகிறது. அப்படியென்றால், 10 போட்டிகள் விளையாடினால் 75 லட்சம் தனியாக கிடைக்கும். இது தவிர அணிகள் கொடுக்கும் ஒப்பந்தத் தொகை தனி.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
முதலில் மனதளவில், அப்புறம் உடலளவில்… அமரன் படம் குறித்து சிவகார்த்திகேயன்