வெளுத்து வாங்கும் மழை: ஐபிஎல் இறுதிப்போட்டி நடைபெறுமா?

விளையாட்டு

ஐபிஎல் இறுதிப்போட்டி நடைபெறும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் மழை வெளுத்து வாங்கி வருகிறது.

நடப்பு ஐபிஎல் சீசன் தொடரின் இறுதிப்போட்டியில் இன்று (மே 28) தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இறுதிப்போட்டியில் யார் கோப்பையை வெல்வார்கள் என்ற எதிர்பார்ப்பு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

final weather report csk vs gt match

இந்தநிலையில் இரவு 7.30 மணிக்கு துவங்க வேண்டிய ஐபிஎல் போட்டி மழை காரணமாக தாமதமாகியுள்ளது. இதனால் இன்னும் டாஸ் போடாமல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

final weather report csk vs gt match

இரவு 9.35 மணிக்குள் மழை குறைந்தால் 20 ஓவர் போட்டி முழுமையாக நடைபெறும். 9.35 மணிக்கு பிறகு போட்டி நடைபெற்றால் 5 ஓவர்கள் குறைக்கப்படும். ஒருவேளை இன்று மழையால் இறுதிப்போட்டி நடைபெறவில்லை என்றால் ஐபிஎல் விதிப்படி நாளை இறுதி போட்டி நடைபெறும்.

செல்வம்

டிஜிட்டல் திண்ணை: ரெய்டுக்கு முன் வந்த போன் கால்…டென்ஷன் உதயநிதி, ரிலாக்ஸ் செந்தில்பாலாஜி

தமிழ்நாடு – ஜப்பான் தொடர்பு: நெகிழ்ந்த ஸ்டாலின்

+1
1
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *