இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதிய கடைசி ஓவரில் விராட் கோலி சந்தித்த நோ பால் இணையத்தில் விவாத பொருளாக மாறியுள்ளது.
கடந்த அக்டோபர் 23-ஆம் தேதி, இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதிய முதலாவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.
பரபரப்பான இந்த போட்டியில் கடைசி ஓவரில், முன்று பந்துகளுக்கு இந்திய அணியின் வெற்றிக்கு 13 ரன்கள் தேவைப்பட்டது. பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் முகமது நவாஸ் வீசிய மூன்றாவது பந்து புல் டாசாக சென்றது.
அந்த பந்தை எல்லைக்கோட்டுக்குப் பறக்க விட்டு சிக்சர் அடித்தார் விராட் கோலி.
பந்து இடுப்பிற்கு உயரமாக வந்ததால் நடுவரிடம் விராட் கோலி நோ பால் கேட்டார். நடுவர் மராஸ் எராஸ்மஸ் நோ பால் என அறிவித்து ஃபிரி ஹிட் கொடுத்தார்.
பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம், பந்துவீச்சாளர் ஷாகீன் ஷா அஃப்ரிடி ஆகியோர் நோ பால் கொடுக்க கூடாது என்று வாதிட்டனர்.
ப்ரீ ஹிட் பந்தில் விராட் கோலி போல்ட் ஆனார். ஃபிரி ஹிட் பந்தில் அவுட் கிடையாது என்பதால் கோலி மூன்று ரன்கள் ஓடினார்.
இதனால் அந்த பந்தை டெட் பால் என அறிவிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் வீரர்கள் நடுவர்களிடம் முறையிட்டனர். ஆனால் நடுவர்கள் பந்தை டெட் பால் என அறிவிக்கவில்லை.
ஐசிசி விதிகளின் படி, ஒரு ஃபிரி ஹிட் பந்து வீசி முடிக்கப்பட்டு கீப்பர் அல்லது பந்துவீச்சாளர்களிடம் வரும் போது அந்த பந்து டெட் ஆகி விடும்.
இவை அல்லாமல் ரன் அவுட் ஸ்டெம்பிங் தவிர்த்து என்ன நடந்தாலும் பேட்ஸ்மேன் ரன் எடுக்கலாம். இந்த விதிகளின் படி தான் விராட் கோலி ரன் எடுத்துள்ளார்.
ஆட்டத்தின் கடைசி ஒரு பந்தில் இந்திய அணியின் வெற்றிக்கு 1 ரன்கள் தேவைப்பட்டதால், அஷ்வின் கடைசி பந்தை அடித்து இந்திய அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.
இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 160 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த நோ பால் குறித்து இணையத்தில் பேசு பொருளாக மாறி உள்ளது. குறிப்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் இந்திய அணி ஏமாற்றி வெற்றி பெற்று விட்டது என்ற கருத்துக்களை முன் வைத்து வருகின்றனர்.
அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய அணி ரசிகர்கள் ஐசிசி விதிகளின்படி தான் விராட் ரன் எடுத்தார் என்று தெரிவித்து வருகின்றனர்.
செல்வம்
கெடு விதித்த ஆளுநர்… மோதிப்பார்க்கும் பினராயி…என்ன நடக்கிறது கேரளாவில்?