பிரமாண்டமாகத் தொடங்கிய கால்பந்து உலகக் கோப்பை!

விளையாட்டு

உலகக் கோப்பை கால்பந்து போட்டி வண்ணமிகு கலைநிகழ்ச்சிகளுடன் கத்தாரில் இன்று (நவம்பர் 20) கோலாகலமாகத் தொடங்கியது.

4 வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டி இந்த ஆண்டு அரபு நாடான கத்தாரில் நடைபெறுகிறது.

மிகவும் சிறிய நாடான கத்தார் கால்பந்து திருவிழாவிற்காகப் பெரிய ஏற்பாடுகளைச் செய்துள்ளது. இதற்காக பெருந்தொகையை கத்தார் செலவு செய்துள்ளது. கத்தாரின் 5 நகரங்களில் உள்ள 8 மைதானங்களில் போட்டிகள் நடைபெறவுள்ளன.

fifa worldcup football 2022 starts today in qatar grantly

டிசம்பர் 18-ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த கால்பந்து திருவிழாவில் 32 அணிகள் கலந்து கொண்டு பட்டம் வெல்ல மோதுகின்றன. இந்த தொடரில் போட்டியை நடத்தும் நாடான கத்தார் நேரடியாகப் போட்டிக்குத் தேர்வாகியுள்ளது.

fifa worldcup football 2022 starts today in qatar grantly

32 அணிகளும் 8 பிரிவாகப் பிரிக்கப்பட்டு லீக் போட்டிகள் நடைபெறவுள்ள இந்த தொடரில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் மட்டுமே நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறும்.

கால்பந்து போட்டிகள் தொடங்கி நடைபெறும் நாள் எப்போது வரும் என்ற ரசிகர்களின் நீண்ட நாள் காத்திருப்பு இன்று நிறைவடைந்துள்ளது. காரணம் கத்தாரில் கால்பந்து திருவிழா துவங்கி விட்டது.

fifa worldcup football 2022 starts today in qatar grantly

மிகவும் பிரமாண்டமாக வண்ணமயமான வானவேடிக்கைகள், நடனம், இசை எனக் கண்கவர் நிகழ்ச்சிகளுடன் உற்சாகத்திற்குப் பஞ்சமில்லாமல் தொடக்க விழா நடைபெற்றது.

fifa worldcup football 2022 starts today in qatar grantly

இதனை கால்பந்து போட்டியாளர்களும், ரசிகர்களும் ஆர்வமுடன் கண்டுகளித்தனர்.

போட்டியின் முதல் நாளான இன்று கத்தார் மற்று ஈகுவாடர் அணிகள் மோதுகின்றன.

மோனிஷா

பணத்தைக் கரைக்காதீர்கள்… பத்திரப்படுத்துங்கள்:  அலாரம் அடிக்கும் அமேசான் தலைவர்

அனைத்து கட்சியுடனும் அதிமுக கூட்டணி: ராஜன் செல்லப்பா

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.