உலக கோப்பை போட்டி: எந்த தொலைக்காட்சியில் பார்க்கலாம்?

விளையாட்டு

மிகவும் பெரிதாக எதிர்பார்க்கப்பட்ட 22-வது பிபா உலக கோப்பை கால்பந்து போட்டி இன்று (நவம்பர் 20) கத்தாரில் கலை நிகழ்ச்சிகளுடன் துவங்க உள்ளது.

இன்று மாலை 7.30 மணியளவில் அல் பேட் மைதானத்தில் தொடக்க விழா நடைபெறுகிறது. இவ்விழாவிற்கான முழுப்பட்டியலை பிபா இன்னும் வெளியிடவில்லை.

இரவு 9.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் குரூப் ஏ பிரிவில் உள்ள கத்தார் மற்றும் ஈகுவடார் அணிகள் மோதுகின்றன.

தொடக்க நிகழ்ச்சியில், தென் கொரியாவின் பிரபல இசைக்கலைஞரான ஜங்கூக், ட்ரீமர்ஸ் என்ற தலைப்பில் பாடல் பாட உள்ளார்.

இன்று அல் பேட் மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டியை 60 ஆயிரம் ரசிகர்கள் கண்டுகளிக்க உள்ளனர்.

ஸ்போர்ட்ஸ் 18 சேனல் மற்றும் ஜியோ சினிமா செயலியில் கால்பந்து போட்டியை நேரடியாகக் காணலாம். கடைசி போட்டியானது டிசம்பர் 18-ஆம் தேதி லுசைல் மைதானத்தில் நடைபெற உள்ளது.

செல்வம்

ரசிகர்களை சந்தித்தார் விஜய்

ஆட்சியும் மழையும் : மு.க.ஸ்டாலின் கலகல பேச்சு!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0