உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் மெக்சிகோ அணியை வீழ்த்தி அர்ஜென்டினா அணி வெற்றிபெற்றது.
ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் கத்தாரில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் ஒரு முறை மோத வேண்டும்.
லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் 2-வது சுற்றுக்கு தகுதி பெறும்.
இதில் நேற்று (நவம்பர் 26) லுசைல் ஸ்டேடியத்தில் நடந்த ‘சி’ பிரிவு ஆட்டத்தில் அர்ஜென்டினா மற்றும் மெக்சிகோ அணிகள் மோதின.
முன்னதாக சவுதி அரேபியா அணிக்கு எதிரான முதல் போட்டியில் அர்ஜென்டினா தோல்வியை சந்தித்தது. இதனால் அடுத்த இரு போட்டிகளிலும் அர்ஜென்டினா வெற்றிபெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
அதேபோல் மெக்சிகோ அணி, போலந்து அணிக்கு எதிரான முந்தைய போட்டியில் டிரா செய்திருந்தது.
இந்நிலையில், நேற்று பரபரப்பாக தொடங்கிய இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதல் கோல் அடிக்க இரு அணிகளும் தீவிரம் காட்டிய போதும், முதல் பாதி வரை எந்த அணியும் கோல் அடிக்கவில்லை.
இரண்டாவது பாதியின் 64 வது நிமிடத்தில் அர்ஜென்டினா கேப்டன் லியோனல் மெஸ்சி தமக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கோல் அடித்து அந்நாட்டு ரசிகர்களை மகிழ்வித்தார்.
தொடர்ந்து 87 வது நிமிடத்தில் பெர்னான்டஸ் மேலும் ஒரு கோல் அடித்து அர்ஜென்டினாவின் வெற்றியை உறுதி செய்தார்.
கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்ட போதும் மெக்சிகோ அணியால் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை. இறுதியில் 2-0 என்ற கோல் கணக்கில் தனது முதல் வெற்றியை அர்ஜென்டினா அணி பதிவு செய்தது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் – பருப்பு, கிழங்கு உணவுகள் வாயுத்தொல்லையை ஏற்படுத்துவது உண்மையா?