22 வது ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. நேற்று (நவம்பர் 22) நடந்த லீக் போட்டியில் 2 க்கு 1 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா அணியை வீழ்த்தி சவுதி அரேபியா அசத்தியது.
இந்த ஆட்டத்தில், 10 வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை மெஸ்ஸி கோலாக மாற்றினார்.
போட்டியின் 27 வது நிமிடத்தில் அர்ஜென்டினா வீரர் மார்டினிஸ் கோல் அடிக்க, அது ஆஃப் சைடு என்று அறிவிக்கப்பட்டது. இது போட்டியில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து 48 வது நிமிடத்தில் சவுதி வீரர் சாலே அல் செரியும், 53 வது நிமிடத்தில் சவுதி வீரர் சலீமும் கோல் அடிக்க, இதில் சவுதி அணி 2 க்கு1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது
இந்த நிலையில் , சவுதி அரேபியாவின் இந்த வரலாற்று வெற்றியை ஒட்டுமொத்த அரேபிய நாடுகளும் கொண்டாடி வருகின்றன. இந்த ஆட்டத்தை மைதானத்தில் நேரில் பார்த்த கத்தார் அரசர் ஷேம் தமீம் பின் ஹமத், சவுதி கொடியை ஏந்தி வெற்றியை கொண்டாடினார். இதே போன்று யுஏஇ பிரதமரும், துபாயின் அரசருமான ஷேக் முகமது பின் ரஷித், ’இது அரேபியர்களுக்கு கொண்டாட்டமான நாள்’ என்று தனது சமூக வலைதள பக்கமான ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இதே போன்று சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், தங்களது அணி வீரர்களை வெற்றியை கட்டி அணைத்து கொண்டாடினார்.

இந்த நிலையில் சவுதியின் இந்த வரலாற்று வெற்றியை கொண்டாடும் விதமாக இன்று (நவம்பர் 23) பள்ளி, கல்லூரி, தனியார் மற்றும் அரசு அலுவலகங்கள் என அனைவருக்கும் பொது விடுமுறையை அறிவிப்பதாக சவுதி அரசர் சல்மான் பின் அப்துல் ஆசிஸ் தெரிவித்துள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
2024 டி20 உலகக்கோப்பை: கிரிக்கெட் முறையில் மாற்றம்!
Masha Allah, Allah is great, congratulations to Saudi Arabia..
Masha Allah