2022 பிஃபா கால்பந்து போட்டி எப்போது?

Published On:

| By Selvam

பிஃபா கால்பந்து போட்டி இந்த வருடம் நவம்பர் மாதம் 20ஆம் தேதி கத்தாரில் நடைபெறும் என்று பிஃபா அறிவித்துள்ளது.

பிஃபா கால்பந்து போட்டியானது, உலகம் முழுவதும் கால்பந்து ரசிகர்களால் கொண்டாடப்படும் விளையாட்டு.

அரபு நாட்டில் முதல்முறையாக பிஃபா கால்பந்து போட்டி நடைபெறுகிறது. கத்தார் நாட்டில் அதிக வெப்பம் நிலவுவதன் காரணமாக, இந்த போட்டியானது, நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் 32 நாடுகள் பங்குபெறுகின்றன. 8 பிரிவுகளாக நாடுகள் பிரிக்கப்பட்டுள்ளன.  முதல் போட்டியில் கத்தார் நாடு, ஈக்குவடார் நாட்டை எதிர்கொள்கிறது. இந்த போட்டியானது தோகா நகரில் உள்ள அல் துமா மைதானத்தில் நடைபெறுகிறது. இறுதி போட்டியானது டிசம்பர் 20-ம் தேதி நடைபெறுகிறது.  

ஏ பிரிவில் உள்ள அணிகள்

 கத்தார், ஈகுவடார், செனகல், நெதர்லாந்து

பி பிரிவில் உள்ள அணிகள்

 இங்கிலாந்து, ஈரான், அமெரிக்கா, வேல்ஸ்

 சி பிரிவில் உள்ள அணிகள்

 அர்ஜென்டினா, சவுதிஅரேபியா, மெக்சிகோ, போலந்து

டி பிரிவில் உள்ள நடப்பு சாம்பியன் அணிகள்

 பிரான்ஸ், ஆஸ்திரேலியா, டென்மார்க், துனிசியா

இ பிரிவில் உள்ள முன்னாள் சாம்பியன் அணிகள்

ஸ்பெயின், கோஸ்டாரிகா,ஜெர்மனி, ஜப்பான்

எப் பிரிவில்  உள்ள அணிகள்

பெல்ஜியம், கனடா, மொராக்கோ, குரோஷியா

ஜி பிரிவில் உள்ள அணிகள்

பிரேசில், செர்பியா, சுவிட்சர்லாந்து, கேமரூன்

எச் பிரிவில் உள்ள அணிகள்

போர்ச்சுகல், கானா, உருகுவே, கொரியா

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel