இந்திய கிளப் அணிகளான ஸ்ரீ கோகுலம் கேரளா எஃப்சி, மற்றும் ஏடிகே மோகன் பாகன் ஆகிய அணிகளை திட்டமிட்டபடி போட்டிகளில் பங்கேற்க அனுமதி தருமாறு,
மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (எப்ஐஎப்ஏ), ஆசிய கால்பந்து சம்மேளனம் ஆகியவற்றுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்திய கால்பந்து கூட்டமைப்பில் 3-ம் தரப்பினர் தலையீடு இருப்பதாகவும், அவர்களின் தேவையற்ற செல்வாக்கின் காரணமாக சர்வதேச கால்பந்து கூட்டமைப்பின் சட்டங்களை கடுமையாக மீறுவதாலும்,
இந்திய கால்பந்து கூட்டமைப்பை உடனடியாக இடைநீக்கம் செய்வதாக சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு அறிவித்தது.
இந்த தடை காரணமாக அக்டோபர் 11ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரையில் இந்தியாவில் நடைபெற திட்டமிடப்பட்ட 17 வயதுக்கு உட்பட்டோருக்கான பிஃபா மகளிர் உலக கோப்பை 2022 போட்டிகள் தொடரை நடத்தும் உரிமையை இந்தியா இழந்துள்ளது.
சர்வதேச கால்பந்து கூட்டமைப்பின் இந்த நடவடிக்கை கால்பந்து விளையாட்டு வீரர்கள், ஆர்வலர்கள் என பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் விளையாட்டு அமைச்சகம் சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு மற்றும் ஆசிய கால்பந்து கூட்டமைப்பை அணுகியுள்ளனர்.
இதில் இந்திய கிளப் அணிகளான ஸ்ரீ கோகுலம் கேரளா எஃப்சி, மற்றும் ஏடிகே மோகன் பாகன் ஆகிய அணிகளை திட்டமிட்டபடி போட்டிகளில் பங்கேற்க அனுமதி கோரியுள்ளனர்.
உஸ்பெகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டு இந்திய அணிக்கு இயன்ற அனைத்து உதவிகளையும் செய்யுமாறு விளையாட்டு அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.
க.சீனிவாசன்