உலகக்கோப்பை கால்பந்து: அடுத்த சுற்றுக்கு முன்னேறிய போர்ச்சுகல்

விளையாட்டு

உலகக்கோப்பை கால்பந்து தொடரில் உருகுவே அணியை வீழ்த்தி, போர்ச்சுக்கல் அணி அடுத்து சுற்றுக்கு முன்னேறியது.

கத்தாரில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து திருவிழா களைகட்டி வருகிறது.

அதன்படி, ‘ஜி’ பிரிவு லீக் ஆட்டத்தில் போர்ச்சுக்கல் மற்றும் உருகுவே அணிகள் நேற்று நள்ளிரவு தோகாவில் உள்ள லூசைல் மைதானத்தில் மோதின. 2 ஆவது வெற்றியுடன் நாக் அவுட் சுற்றுக்கு தகுதிபெறும் முனைப்பில் போர்ச்சுக்கல் அணி களமிறங்கியது.

அதேபோல் முதல் வெற்றியை பதிவு செய்யும் முனைப்பில் உருகுவே அணி களம் கண்டது.

இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தியது கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுகல் அணி. ஆட்டத்தில் சுமார் 60 சதவீதம் பந்தை அவர்கள் தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.

fifa football worldcup portugal won

2 கோல் அடித்த ப்ரூனோ ஃபெர்னான்டஸ்

தொடர்ந்து இரண்டாம் பாதி ஆட்டம் பரபரப்பாக தொடங்கியது. ப்ரூனோ ஃபெர்னான்டஸ் கொடுத்த பாஸ், கோலாக மாறியது. இதன் மூலம் போர்ச்சுகல் அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. அதற்கேற்ப 76 வது நிமிடத்தில் உருகுவே அணிக்கு ஃபிரீ கிக் வாய்ப்பு கிடைத்தது. அதில் மிக எளிதாக கோல் அடிக்க கிடைத்த வாய்ப்பை, உருகுவே வீரர் சுவாரஸ் தவறவிட்டார்.

அதேபோல் கோமெஸ் அடித்த பந்து கோல் போஸ்டில் அடித்து வெளியேறியது. தொடர்ந்து 88 வது நிமிடத்தில் போர்ச்சுகல் அணியின் ப்ரூனோ ஃபெர்னான்டெஸ் ட்ரிபிள் செய்த பந்தை, உருகுவே அணியின் கிமெனெஸ் கைகளில் பட்டு சென்றது.

இதனால் போர்ச்சுகல் அணிக்கு பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்டது. அதில் போர்ச்சுகல் அணியின் ப்ரூனோ பெர்னான்டெஸ் இரண்டாவது கோல் அடித்து அசத்தினார்.

fifa football worldcup portugal won

அடுத்த சுற்றில் போர்ச்சுகல்

இதன் மூலம் போர்ச்சுகல் அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. பின்னர் இரண்டாம் பாதியில் கூடுதலாக 9 நிமிடங்கள் வழங்கப்பட்டது. அதில் போர்ச்சுகல் அணியின் ப்ரூனோ ஃபெர்னான்டெஸ் மீண்டும் கோல் அடிக்க முயற்சித்தார்.

ஆனால் அது கோல் போஸ்டில் அடித்து வெளியேறியது. இறுதியாக போர்ச்சுகல் அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. இதனையடுத்து போர்ச்சுகல் அணி நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது.

2018ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை கால்பந்து தொடரில், ரவுண்ட் ஆஃப் 16 போட்டியில் உருகுவே அணியிடம் போர்ச்சுகல் தோல்வியடைந்தது. அதற்கு நேற்றைய போட்டியில் பதிலடி கொடுத்துள்ளது, போர்ச்சுகல்.

ஜெ.பிரகாஷ்

கனமழை: இன்று 2 மாவட்டங்களுக்கு விடுமுறை!

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

கிச்சன் கீர்த்தனா: கீரை – அவல் உப்புமா

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.