ஃபிஃபா கால்பந்து: முதல் கோல் அடித்த மெஸ்ஸி

விளையாட்டு

ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை தொடர் கத்தாரில் நவம்பர் 20 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

முதல் போட்டியில் கத்தாரை வீழ்த்தி ஈகுவடார் அணி வெற்றி பெற்றது.

நேற்று (நவம்பர் 21) நடந்த 2 போட்டிகளில் ஈரானை வீழ்த்தி இங்கிலாந்தும், செனகலை வீழ்த்தி நெதர்லாந்தும் தங்களது வெற்றியை பதிவு செய்தன.

இன்று 3 போட்டிகள் நடக்கின்றன. இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கி நடந்துவரும் போட்டியில் க்ரூப் சி-யில் இடம்பெற்றுள்ள அர்ஜென்டீனாவும் சவுதி அரேபியாவும் தற்போது விளையாடி வருகின்றன.

ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் லியோனல் மெஸ்ஸி சவுதி அரேபியாவுக்கு எதிரான இன்றைய ஆட்டத்தின் 9 வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி முதல் கோலை அடித்து இந்த உலக கோப்பையில் தனது கோல் கணக்கை தொடங்கியுள்ளார்.

இந்த உலக கோப்பையை அர்ஜென்டீனாவுக்கு வென்று கொடுப்பார் என்று சர்வதேச அளவில் மெஸ்ஸியின் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கும் வேளையில் மெஸ்ஸி முதல் கோலை அடித்ததும் அரங்கமே அதிர்ந்தது குறிப்பிடத்தக்கது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

கேரள ஜோடியின் விநோத செயல்: பாராட்டிய இந்திய ராணுவம்!

ஷாரிக் வாட்ஸ் அப்பில் ஈஷா சிவன்: அதிர்ச்சித் தகவல்!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *