6ஆவது முறையாக இறுதிப்போட்டியில் அர்ஜெண்டினா
ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பை போட்டியில் குரோஷியாவுக்கு எதிரான அரையிறுதி போட்டியில் அர்ஜெண்டினா வெற்றி பெற்றது.
கத்தாரில் நடைபெற்று வரும் உலக கோப்பை கால்பந்து தொடரில் முதல் அரைஇறுதி போட்டி நள்ளிரவு 12.30 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. லுசைஸ் மைதானத்தில் தொடங்கிய முதல் ஆட்டத்தில் அர்ஜெண்டினா, குரோஷியா அணிகள் களம் இறங்கின.
இதில் 3-0 என்ற கோல் கணக்கில் குரோஷியாவை அர்ஜெண்டினா வீழ்த்தியது.
இதில், அர்ஜெண்டினா அணித்தலைவரும், நட்சத்திர வீரருமான மெஸ்சி, 34ஆவது நிமிடத்தில் முதல் கோல் அடித்தார்.
அவரைத் தொடர்ந்து 39ஆவது நிமிடத்தில் மற்றொரு வீரர் ஜூலியன் அல்வொரஸ் ஒரு கோல் அடிக்க 2-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா முன்னிலையிலிருந்தது.
தொடர்ந்து 69ஆவது நிமிடத்தில் ஜூலியன் அல்வொரஸ் மீண்டும் ஒரு கோல் அடிக்க 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றியை உறுதி செய்தது அர்ஜெண்டினா. இதன்மூலம் 6ஆவது முறையாக அர்ஜெண்டினா உலகக்கோப்பை இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது.
ஆட்ட நேரம் முடிவு வரை குரோஷியா எந்த கோலும் அடிக்கவில்லை.
அர்ஜெண்டினா வெற்றியை தொடர்ந்து அந்நாட்டு ரசிகர்கள் விடிய விடிய கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலைவாய்ப்பு : தமிழ்நாடு வனத்துறையில் பணி!