ரசிகர்களின் போராட்டம்…மீண்டும் இந்திய அணியில் சஞ்சு சாம்சன்

Published On:

| By Jegadeesh

Finally Sanju Samson got the justice

ரசிகர்களின் பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு இந்திய கிரிக்கெட் அணி வீரர் சஞ்சு சாம்சன் மீண்டும் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அதன்படி, இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் 2 டெஸ்ட் போட்டிகளை விளையாடி முடித்துள்ளது. இதில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றியது.

இதனிடையே 3 ஒரு நாள் கிரிக்கெட் போட்டி மற்றும் 5 டி20 போட்டிகளில் இரண்டு அணிகளும் நேரடியாக மோத உள்ளன.

இதில் இன்று (ஜூலை 29) நடைபெறும் இரண்டாவது ஒருநாள் போட்டி பார்படாஸ் நகரில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

முன்னதாக, இந்த போட்டிக்கான இந்திய அணியில் எந்தெந்த வீரர்களுக்கு இடம் கிடைக்கும் என்பது குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.

மேலும், முதல் போட்டியின் போது ஆடும் லெவனில் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில், இன்றைய போட்டியில் அவர் ஒன்பது மாதங்களுக்கு பிறகு மீண்டும் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருடன் அக்‌ஷர் படேலும் இணைந்துள்ளார்.

Image

அதேநேரம் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு இந்த போட்டியில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக ஹர்திக் பாண்ட்யா அணியின் கேப்டனாக செயல்படுகிறார். மேலும், அதிரடி ஆட்டக்காரர் விராட் கோலிக்கும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக , கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரில் இந்திய அணியில் சஞ்சு சாம்சன் விளையாடி இருந்தார். அதற்கு பின்னர் அவர் அணியில் சேர்க்கப்பட வில்லை.

அவரை அணியில் சேர்க்க வேண்டும் என்று அண்மையில் கேரள மாநிலம் திருவனந்தபுரம் மைதானத்தில் ரசிகர்கள் போராட்டம் செய்தனர். இதனிடையே சமூகவலைதளங்களில் சஞ்சு சாம்சனுக்கு ஆதரவாகவும் பிசிசிஐ-க்கு எதிராகவும்  ரசிகர்கள் பதிவுகள் வெளியிட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

மணிப்பூர் மக்களுக்கு நீதி வேண்டும் : கனிமொழி எம்.பி!

திமுக இளைஞரணி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel