பிரபல மல்யுத்த வீரர் ரே மிஸ்டீரியோ சீனியர் தனது 66வது வயதில் இன்று (டிசம்பர் 21) காலமானார்.
மெக்சிகோ நாட்டைச் சேர்ந்தவர் ரே மிஸ்டீரியோ சீனியர். இவரது உண்மையான பெயர் மிகுவல் ஏஞ்சல் லோபஸ் டயஸ்.
தொழில்முறை மல்யுத்த போட்டியாக கருதப்படும் லுச்சா லிப்ரே (Lucha Libre) தொடரில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். பறந்து பறந்து தாக்கும் ரே மிஸ்டீரியோ சீனியரின் ஸ்டைல் அவருக்கு உலகெங்கிலும் ரசிகர்களை பெற்று தந்தது. தனது பாணியை தனது மருமகனும், பிரபல WWE சூப்பர்ஸ்டாரான டொமினிக் மிஸ்டீரியோவின் கற்றுக்கொடுத்தார்.
1976ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 30 ஆண்டுகளாக மல்யுத்த களத்தில் சிறந்த வீரராக திகழ்ந்த அவர் கடந்த 2009ஆம் ஆண்டு தொழில்முறை போட்டிகளில் இருந்து முழுமையாக ஓய்வு பெற்றார்.
இந்த நிலையில் ரே மிஸ்டீரியோ சீனியர் தனது 66வது வயதில் இன்று காலமானார் என்பதை அவரது குடும்பத்தினர் உறுதிபடுத்தியுள்ளனர். எனினும் அவரது இறப்புக்கான உண்மையான காரணம் இன்னும் வெளிவரவில்லை.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
தி.மு.க. எம்.பி.க்கள் என்ன பேசுகிறார்கள்? கேட்டவர்களுக்கு பட்டியல் போட்டு ஸ்டாலின் பதிலடி!
ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு வாய்ப்பில்லை… தனி அதிகாரிகள் நியமிக்கப்படும் 28 மாவட்டங்கள் என்னென்ன?
மாநில அரசுக்கு ’தலைவலி’ கொடுப்பதற்குத்தான் ஓர் ஆளுநரா? : கி.வீரமணி கேள்வி!