MS DHONI: உலகிலேயே சிறந்த கேப்டன்… சொன்னது யாருன்னு பாருங்க!
2024 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர், மிகவும் எதிர்பார்க்கப்படும் சிஎஸ்கே vs ஆர்சிபி போட்டியுடன், வரும் மார்ச் 22 அன்று துவங்குகிறது.
இப்போட்டி சேப்பாக்கத்தில் நடைபெறவுள்ளதால், ‘தல’ தோனியை மீண்டும் கிரிக்கெட் களத்தில் பார்க்கவுள்ள உற்சாகத்தில் ரசிகர்கள் உள்ளனர்.
இந்நிலையில், ஐபிஎல் துவங்குவதற்கு முன்னதாக, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த ஆர்சிபி கேப்டன் ஃபாஃப் டூ பிளெஸ்ஸிஸ், பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார்.
ஃபாஃப் டூ பிளெஸ்ஸிஸை 2011 ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் பெற்றது.
CSK-விடம் உதவி கேட்ட அஸ்வின்… அவரின் ஆசை நிறைவேறுமா?
தொடர்ந்து, 2012 ஆம் ஆண்டில் தனது முதல் ஐபிஎல் போட்டியில் பிளெஸிஸ், அன்று முதல் 2021 ஆம் ஐபிஎல் தொடர் வரை சென்னை அணியின் ஒரு மிகப்பெரிய சொத்தாகவே பார்க்கப்பட்டார்.
குறிப்பாக, 2021 ஆம் ஆண்டு சென்னை அணி கோப்பையை வெல்ல, ஃபாஃப் டூ பிளெஸ்ஸிஸ் ஆற்றிய பங்கு இன்றியமையாதது என்றே கூறலாம்.
இதைத்தொடர்ந்து, 2022 ஐபிஎல் தொடருக்கான மெகா ஆக்சனில் டூ பிளெஸிஸை, பெங்களூர் அணி ஏலத்தில் வாங்கியது.
IPL 2024: இதுக்கு பருத்திமூட்டை ‘குடோன்லேயே’ இருந்துருக்கலாம்… கிண்டலடிக்கும் ரசிகர்கள்!
அந்த ஆண்டு, விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகிய நிலையில், ஃபாஃப் டூ பிளெஸ்ஸிஸ் ஆர்சிபி-யின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டார். இந்நிலையில், தனது இந்த பயணம் குறித்து பேசிய டூ பிளெஸ்ஸிஸ், “தோனி ஒரு மிகச் சிறந்த கேப்டன்.
பல ஆண்டுகளாக அவருடன் விளையாடிய வகையில், நான் மிகவும் அதிர்ஷ்டசாலி. அதுவே எனது வாழ்க்கையில் நிகழ்ந்த மிகப் பெரிய விஷயம்”, எனக் கூறியுள்ளார்.
மேலும், “நான் அவரைப் பார்க்கும்போது, அவரை ஒரு பெரிய சகோதரன் போல உணர்கிறேன். நீங்கள் அவரை அடிக்க விரும்புவீர்கள்.
IPL 2024: எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள்… நம்பிக்கை அளிக்கும் CSK வீரர்!
ஆனால் உண்மையில் அவரை நீங்கள் அடிக்க விரும்ப மாட்டீர்கள். ஏனென்றால் அந்த அளவுக்கு அவர்மீது மரியாதை இருக்கும். அப்படியான உணர்வு தான் அவரை பார்க்கும்போது எனக்கு ஏற்படுகிறது”, எனவும் டூ பிளெஸ்ஸிஸ் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, விராட் கோலியின் பேட்டிங் குறித்தும் பேசிய ஃபாஃப் டூ பிளெஸ்ஸிஸ், “நான் ஒருவருடன் பேட்டிங் செய்ய மிகவும் விரும்புகிறேன் என்றால், அது நிச்சயம் விராட் கோலி தான்”, என தெரிவித்துள்ளார்.
அவருடன் பேட்டிங் செய்யும்போது தனக்கு அளவற்ற ஆற்றல் கிடைப்பதாகவும் அவர் கூறியுள்ளார். ஃபீல்டிங்கிலும் அவரது ஆற்றல் இன்றியமையாதது எனவும் பாராட்டியுள்ளார்.
– மகிழ்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டெல்லி மதுபான வழக்கில் கவிதாவுக்கு தொடர்பா? – ஆம் ஆத்மி விளக்கம்!
Kanguva: டீசர் வெளியீட்டை ‘திருவிழா’ போல நடத்தும் நிறுவனம்!
பிரதமர் ரோடு ஷோவில் மாணவர்கள்: தேர்தல் ஆணையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் புகார்!