பாகிஸ்தான் வெற்றியை புரட்டி போட்ட பிலிப் சால்ட்

பாகிஸ்தானுக்கு எதிராக நேற்று (செப்டம்பர் 30) நடைபெற்ற 6வது டி20 ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இங்கிலாந்து அணி.

பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 7 டி20 போட்டிகள் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இதுவரை 5 போட்டிகள் முடிந்த நிலையில் பாகிஸ்தான் அணி 3-2 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. இந்நிலையில் 6வது டி20 போட்டி நேற்று இரவு லாகூரில் உள்ள கடாஃபி ஸ்டேடியத்தில் நடைபெற்றது.

வாழ்வா, சாவா என்ற நிலையில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதனை தொடர்ந்து பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் மற்றும் தனது முதல் டி20 போட்டியை சந்திக்கும் முகமது ஹாரிஸ் ஆகியோர் களமிறங்கினர்.

ஆனால் 59 பந்தில் 87 ரன்கள் என அதிரடியாக கடைசிவரை ஆட்டமிழக்காமல் ஆடிய பாபர் அசாம் தவிர பாகிஸ்தான் அணியில் யாரும் சிறப்பாக ஆடவில்லை.

இதனால் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் குவித்தது.

தொடரை சமன் செய்த இங்கிலாந்து!

தொடர்ந்து 170 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியில் பிலிப் சால்ட் மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகியோர் சிறப்பான தொடக்கம் அளித்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 55 ரன்கள் குவித்தது.

அதனை தொடர்ந்து வந்த டேவிட் மாலன் 26 ரன்கள் குவித்தார். பின்னர் வந்த பென் டக்கெட்டும், பிலிப் சாட்டும் அதிரடியான ஆட்டத்தை வெளிபடுத்த இங்கிலாந்து அணி 14.3 ஓவரில் 170 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது.

இதன் மூலம் 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இங்கிலாந்து அணி தொடரை 3 – 3 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது.

41 பந்தில் 13 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 88 ரன்களை குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த இங்கிலாந்து அணி வீரர் பிலிப் சால்ட் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

இதற்கிடையே கோப்பையை தீர்மானிக்கும் கடைசி போட்டி நாளை இதே மைதானத்தில் நடைபெறுகிறது.

கிறிஸ்டோபர் ஜெமா

இரண்டாவது ஒருநாள் போட்டி: 100 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி!

குழந்தைகளுக்குத் தமிழில் பெயர் வைத்தால் சிறப்புப் பரிசு!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts