Champions Trophy : ஆப்கானிஸ்தான் உடனான அதிர்ச்சி தோல்வியால் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து இங்கிலாந்து அணி சோகத்துடன் வெளியேறியது. england again fall under afghanistan
சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்னதாக நடந்த இந்தியா உடனான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 0-3 என்ற கணக்கில் பரிதாபமாக இழந்தது இங்கிலாந்து. அப்போது பேசிய அந்த அணியின் தொடக்க வீரர் பென் டக்கெட், “சாம்பியன்ஸ் டிராஃபியை வெல்வதே எங்கள் இலக்கு. ஒருநாள் தொடரில் இந்தியாவிடம் 0-3 என்ற தோல்வி ஏற்பட்டிருந்தாலும், அதனால் எங்களின் நம்பிக்கை குறையவில்லை. இறுதிப்போட்டியில் இந்தியாவை தோற்கடிப்போம்” எனக் கூறியிருந்தார்.

எனினும் குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றிருந்த இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் ஏற்கெனவே அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்று விட்டன.
ஆனால் குரூப் பி பிரிவில் இடம்பெற்ற இங்கிலாந்து அணி சாம்பியன் டிராபி தொடரில் தனது முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடம் மோதியது. அந்தப் போட்டியில், இங்கிலாந்து அணி 351 ரன்கள் குவித்தும், ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வியடைந்தது.
அந்த தோல்வியை தொடர்ந்து நேற்று ஆப்கானிஸ்தான் அணியுடன் மோதிய நிலையில், வெற்றிக்கு நெருங்கி வந்து தோல்வி அடைந்தது அந்நாட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
சர்தான் அபார சதம்! england again fall under afghanistan
லாகூரில் நேற்று நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. முன்னனி பேட்ஸ்மேன்களான குர்பாஸ் (6), செடிகுல்லா (4), ரஹ்மத் (4) ஆகியோர் ஒற்றை இலக்க ரன்னில் வெளியேறினர்.

எனினும் அதன்பின்னர் அதிரடியாக ஆடிய இப்ராஹிம் சர்தான், சாம்பியன்ஸ் டிராபியில் தனது முதல் சதத்துடன் 177 ரன்கள் குவித்தார். அவருடன் கேப்டன் சாஹிடி(40), அஸ்மதுல்லா(41) மற்றும் நபி (40) ஆகியோரும் ரன்கள் குவித்தனர்.
இதனால் 50 ஓவர்கள் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 325 ரன்கள் எடுத்தது.
இங்கிலாந்து அணி சொதப்பல்! england again fall under afghanistan
இதனைத் தொடர்ந்து 326 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது இங்கிலாந்து அணி.
அந்த அணியில் அனுபவ வீரர் ஜோ ரூட் 120 ரன்கள் குவித்த நிலையில், மற்ற வீரர்கள் யாருமே 40 ரன்களை தாண்டவில்லை. அந்த அணி கடைசி வரை போராடி 49.5 ஓவர்கள் முடிவில் 317 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் ஆப்கானிஸ்தான் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அரையிறுதி வாய்ப்பை தக்க வைத்துள்ளது.

ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுடன் தோல்வியை தழுவிய இங்கிலாந்து அணி தொடரில் இருந்து வெளியேறியுள்ளது.
கடந்த 2023ஆம் ஆண்டு இந்தியாவில் நடந்த உலக்கோப்பை தொடரிலும் லீக் போட்டியில் 69 ரன்கள் வித்தியாத்தில் ஆப்கானிஸ்தான் அணியிடம் இங்கிலாந்து அணி தோல்வியை தழுவியிருந்தது குறிப்பிடத்தக்கது.