உலக பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான துப்பாக்கி சுடுதல் போட்டியில் 10 மீ. ஏர் ரைபிளில் இளவேனில் வாலறிவன் இன்று (ஜூலை 29) தங்கம் வென்றுள்ளார்.
சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உலக பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான துப்பாக்கி சுடுதல் போட்டி நேற்று முதல் தொடங்கியுள்ளது.
சர்வதேச பல்கலைக்கழக விளையாட்டு கூட்டமைப்பால் (FISU) நடத்தப்படும் இந்த போட்டியில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான தமிழ்நாட்டைச் சேர்ந்த இளவேனில் வாலறிவன் பங்கேற்றுள்ளார்.
இன்று காலை நடைபெற்ற மகளிருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டியில் பங்கேற்ற இளவேனில் 252.5 புள்ளிகளை பெற்று தங்கம் வென்று அசத்தியுள்ளார்.
முன்னதாக கடந்த 2019ம் ஆண்டு இதே தொடரில் இளவேனில் வெள்ளிப்பதக்கத்தை வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கிறிஸ்டோபர் ஜெமா
பாதிக்கப்பட்ட மணிப்பூர் மக்களுடன் நிற்கிறோம்: கனிமொழி எம்.பி